Advertisment

Rasi Palan 18th February 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Today rasi palan, rasi palan 18th february, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, february horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், பிப்ரவரி 18, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan February 18th 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 18th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 18ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

முக்கியமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தால் அல்லது பயணத் திட்டங்கள் பரிசீலிக்கப்படுகிறதென்றால் தற்போதைய கிரக நிலை அந்த முயற்சியைக் கைப்பற்றும்படி உங்களை வலியுறுத்துகிறது. மேலும், இவ்வளவு காலமாக நீங்கள் ஓடிவந்த நபர்களையும் நிறுவனங்களையும் எடுத்துக்கொள்ள நீங்கள் பயப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதோடு, கடந்தகால தோல்விகளை மாற்றுவதற்கு இது ஒரு சிறந்த தருணம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :

உங்கள் மனதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் முடிவில் மற்றவர்கள் செல்வாக்கு செலுத்த அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் என்ன சொன்னாலும், தர்க்கரீதியாகவும் உள்ளுணர்வு ரீதியாகவும் சரியான முடிவுகளை எடுக்கும் உங்கள் திறமையே இந்த நேரத்தில் உங்கள் மிக சிறப்பான சொத்து.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) :

புதன் கிரகம் புத்திசாலித்தனம் மற்றும் அறிவின் கிரகம் ஆகும். அது ஆழ்ந்த ஆழமான உளவியல் கேள்விகளைப் பற்ற வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. உங்கள் அன்றாட விவகாரங்களை வழிநடத்தும் ஆழ்ந்த விருப்பங்களை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். படிப்படியாக, நீங்கள் நினைத்திராத தாக்கங்களைப் பற்றி மேலும் அறிந்திருக்கிறீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

செவ்வாய் ஒரு உற்சாகமான கிரகம். அதன் இருப்பு சமீபத்தில் ஒரு வலிமையான வாதங்களை வெளிப்படுத்துகிறது. ஒழுங்கை மீட்டெடுக்க நீங்கள் அழைக்கப்படலாம். உங்களைப் பற்றிய கருத்துகொண்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு நீங்கள் விரைவில் ஆதரவளிக்க வேண்டும். கால்களுக்கு முட்கள் கீழே இருந்தாலும் ​​நீங்கள் உங்களுக்காக எழுந்து நிற்க வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

தற்போதைய சவாலான கிரக அம்சங்கள் சமீபத்தில் உங்கள் கற்பனையை நீக்கிவிட்டு, உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒரே ஒரு நபர் மட்டுமே இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. அந்த நபர் வேறு யாரும் அல்ல அது நீங்கள் தான். ஒரு முக்கியமான முடிவை மீண்டும் எடுக்க இப்போது உங்களுக்கு கடைசி வாய்ப்பு உள்ளது. உங்கள் வழியில் குறுகே நிற்கும் நபர்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :

இனி சாத்தியமில்லாத அல்லது குறைந்தபட்சம் உங்கள் தனிப்பட்ட வெற்றிக்கு பங்களிப்பு செய்யாத ஒன்றைக் காக்க உங்கள் வளங்களை நீங்கள் தியாகம் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. நீங்கள் இப்போது புதிய தொடக்கத்தை மேற்கொள்வதன் நன்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :

உங்கள் வணிக மற்றும் தொழில்முறை விவகாரங்கள் சந்தோஷமாக நன்றாகச் செயல்படுகின்றன. மேலும் நீங்கள் மனசாட்சியைப் பின்தொடர்ந்து உங்கள் உள்ளுணர்வை கவனித்து நடந்துகொள்ள அறிவுறுத்தப்படுவீர்கள். காதல் பற்றிய யோசனைகளும் உள்ளன. அன்றைய நிகழ்வுகளுக்கு ஏதுவான தொடர்பைத் தருகின்றன. மேலும், இபோது உங்களுக்கு ஒரு ரகசிய ஊர்சுற்றல் சாத்தியமாகும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

நீங்கள் நிதி விஷயங்களில் கூட்டாளிகளைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். ஏனெனில், அவர்களின் கருத்துக்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் மிகவும் உற்சாகமூட்டுகின்றன. இருப்பினும், உங்கள் நல்ல தன்மையைப் பயன்படுத்திக்கொள்ள அல்லது அவர்களின் பொறுப்புகளை உங்கள் தோள்களில் ஏற்றிக்கொள்ள விரும்புவோரால் உங்களை வழிநடத்த அனுமதிக்காதீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :

உங்கள் ராசியில் பணம் சம்பந்தமான செவ்வாய் கிரகத்தின் நிலை, நிதி நிறுவனங்கள் சில கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டிருக்கக்கூடும். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் வணிகம் போல இருக்கும். நீங்கள் புதிதாகக் கண்டறிந்த நம்பிக்கையின் வலிமை கூட்டாளிகளை பாதுகாப்பாகக் வைத்திருக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

உங்கள் முக்கியமான தனிப்பட்ட முடிவுகள் தற்செயலானவையாக இருக்கும். மேலு, தந்திரமான முடிவுகள் மிக விரைவில் எடுக்கப்பட வேண்டும். நீங்கள் இப்போது ஒரு நீண்டகால உணர்ச்சி மாற்றத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறீர்கள். இது முக்கியமான புதிய நபர்களுடன் நீங்கள் இணைந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும், நீங்கள் பணியில் தகுதியான அங்கீகாரத்தைப் பெற உள்ளீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

இன்றைய நிகழ்வுகள் உங்கள் பரந்த ஆசைகளையும் நீண்ட கால நோக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும் நிலை வரக்கூடும். முக்கியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். கடந்த காலத்துடன் ஒரு தெளிவான இடைவெளியை உருவாக்கிக்கொள்ளுங்கள். புதிய நடவடிக்கைகளைத் தொடங்கினால் முடிவுகள் நேர்மறையாக இருக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :

அனேகமாக நீங்கள் இப்போது வார இறுதியை எதிர்நோக்கி கவனமாக திட்டமிட வேண்டும். அடுத்த சில நாட்கள் உங்கள் நிதி எதிர்காலத்தை பாதிக்கும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வுகளை கொண்டு வரும். பண பரிவர்த்தனைகள் எச்சரிக்கையுடன் நடத்தப்பட வேண்டும். எனவே, நீங்கள் லாபம் சம்பாதிக்க விரும்பினால் இரண்டாவதாக ஒரு நபரிடம் கருத்து கேளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment