Rasi Palan 20th February 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

By: February 20, 2021, 7:20:26 AM

Rasi Palan February 20th 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 20th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 20ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

சூழ்நிலை உங்களை பிற வேலைகளில் ஈடுபட அனுமதிக்கும். கிராமப்புறங்களுக்கு பயணம் அல்லது வெளியூர் பயணங்களுக்கு இது ஒரு சிறந்த நேரம். பயணங்களின் கிரகமான புதன் உங்கள் சிறிய பயணங்களை மகிழ்ச்சியுடன் இன்னும் தூண்டிவிடுகிறது. அது மேலும் உங்கள் திருப்தியின் அடுத்த நிலைக்கு ஊக்குவிக்கிறது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

இரண்டு முரண்பாடான போக்குகளுக்கு இடையில் நீங்கள் சிக்க நேரிடலாம். ஒன்று உண்மைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை. மற்றொன்று உண்மை உலகில் இருப்பதைவிட உங்கள் கற்பனையில் உண்மை இருக்கிறது என்பதை உணருதல் என்ற இரண்டு விஷயங்களில் சிக்க நேரிடலாம். இத்தகைய குழப்பத்துக்கு பதிலாக தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்த கொள்கையாக இருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

உங்கள் ராசியில் ஒரு குறுகிய காலத்திற்கு மர்மம் இருக்கிறது. இன்றைய கிரக கட்டம் ஒரு புதிய திருப்பத்தை சேர்க்கக்கூடும். உங்கள் ராசியில் புதனின் திறமைகள் உண்மையைத் தோண்டி எடுப்பதற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளன. மேலும், அது நீங்கள் நினைத்ததைவிட மிகவும் வித்தியாசமானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

கடினமான காலமாக இருந்தாலும் கூட்டாளிகள் வரும் வாரங்களில் உங்களுக்கு உதவிகளையும் பாதுகாப்பையும் அளிப்பார்கள். இன்று ஒரு மர்மம் தீவிரமடையும். அனேகமாக உங்கள் பார்வையை மேகம்போல மூடி உண்மைகளை மறைக்கலாம். மக்கள் நெருங்கிப் பழக முடியாதா? ஏன் என்று நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்?

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

நீங்கள் ஒரு தாராளமான கூட்டாளியாக இருக்க வேண்டும். ஆனால், இறுதி பகுப்பாய்வில், உங்கள் சொந்த யோசனைகளில் நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள். உண்மையில் உங்கள் கருத்துக்களை எதிர்க்கும் நபர்களுடன் உடன்படவோ அல்லது சமரசம் செய்யவோ முடியும். உங்கள் பிடிவாதமான அணுகுமுறை இன்று இருக்காது. எனவே, பிரச்னைகளை தனியாக விட்டுவிட வேண்டாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

ஒருவேளை நீங்கள் அதிக வேலை செய்திருக்கலாம். ஆனால், நீண்ட விடுமுறை என்பது ஒரு பெரிய கவர்ச்சிகரமான கருத்தாகும். நீங்கள் வெளியே சென்றாலும், உங்கள் தொழில்முறை அக்கறைகளை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். அனேகமாக, நீங்கள் உணர்ச்சி ரீதியான மன அழுத்தத்திலிருந்து ஒரு வழியைத் தேடுகிறீர்கள்!

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

வெள்ளி கிரகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஒரு சவாலான கிரக அமைப்பு மூலம் விசித்திரமான மற்றும் அதிகம் அறியப்படாத தாக்கங்களை ஊக்குவிக்கிறது. இது உங்கள் உணர்ச்சி ஆசைகளைத் தூண்டுகிறது. ஆனால், எச்சரிக்கையை ஊக்குவிக்கிறது. நீங்கள் நிதானமாக இருக்க அறிவுறுத்தப்படுவீர்கள். ஒருபோதும். நீங்கள் வெற்றிபெற முடியாத ஒரு வேளையில் இறங்க வேண்டாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

உங்களைப் புரிந்துகொள்வது உலகில் எளிதான காரியமாக இல்லாவிட்டாலும், கூட்டாளிகள் அவசியம் உங்களுடைய நிதி குறித்து சிந்தனையில் ஈடுபட வேண்டும். இப்போது யாராவது கஷ்டப்படுகிறார்களா? அல்லது அவர்கள் உங்கள் அறிவையும் புரிதலையும் ஆழமா புரிந்து வைத்துள்ளார்களா என்று பாருங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

உங்களுடைய திட்டங்கள் மற்றும் யோசனைகளுக்கு ஏற்படும் முடிவில்லாத எதிர்ப்பால் நீங்கள் இப்போது சோர்வடையலாம். ஆனால், மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு பொது அறிவு இருக்கும். அதனால், நீங்கள் இன்றும் நாளையும் மோதலைத் தவிர்க்க வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

செவ்வாய் கிரகம் இன்னும் உங்கள் ராசியை சாவல் செய்கிறது. உயிரோட்டமான நேரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மற்றவர்களின் உதவாத அல்லது கோரிக்கை பழக்கத்துக்கு நீங்கள் இடமளிக்க வேண்டியிருக்கும். ஏற்றுக்கொள்ள ஒரே வழி இதுதான் என்றால் சமரசத்தை எட்டுவது உறுதி. யாராவது உங்கள் நலன்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றால், நீங்கள் கவலைப்படலாம். ஆனால், இறுதி முடிவுகளுக்கு செல்ல வேண்டாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

உங்கள் சக ராசிக்காரர்களான துலாம் மற்றும் ஜெமினி ராசிக்கார்கள் போலவே, முடிவில்லாத அற்புதமான கிரக தாக்கங்களின் பலன்களை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள். நிகழ்வுகள் திட்டமிட்டபடி செயல்படவில்லை என்றால், நீங்கள் அவற்றை தவறாகக் கையாண்டதால் தான் அப்படி நடந்துள்ளது இப்போது அதை ஈடுசெய்ய சரியாக கையாளுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

ஒரு பெரிய குடும்ப விஷயத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட உள்ளது. விளைவுகளைத் தீர்ப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினு, நீங்கள் நிம்மதி பெருமூச்சு விட ஒரு காரணம் இருக்கலாம். நீங்கள் நண்பர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள அனைவருடனும் பழகுவதற்கு ஏன் உறுதியான முயற்சி செய்யக்கூடாது? இன்று உங்களுக்கான கேள்வி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Today rasi palan february 20th 2021 rasipalan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X