Rasi Palan May 17th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
உண்மையில் வானத்தில் என்ன நடக்கிறது? மற்ற உலகங்களைச் சேர்ந்த வேற்றுக்கிரகவாசிகள் நம்மைப் பார்வையிட்டுள்ளார்களா? சிலர் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை நம்ப மாட்டார்கள். ஆனால், 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின் ஒரு நேர்காணலில், விண்கலத்திற்கு வரும் விசித்திரமான பொருட்களை விவரித்து, அதைச் சுற்றி பறப்பது போன்ற தோற்றத்தைக் கண்டதைக் கூறுகிறார். அவர் எதைப் பார்த்தார் என்று தெரியாது. ஆனால், அவர் ஏதோ ஒன்றை பார்த்திருக்கிறார்.
Rasi Palan 17th May 2021: இன்றைய ராசி பலன், மே 17ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
உங்களிடம் இன்னும் போதுமான அளவு சக்தி உள்ளது. மேலும், நீங்கள் முடிப்பதற்கு முக்கியமான விஷயங்கள் இருந்தால் நேரத்தை வீணாக்காமல் முடித்துவிடுங்கள். அடுத்த வாரத்திற்குள் உங்கள் நட்சத்திரங்கள் மிகவும் நிதானமாக இருக்கும். இது ஒரு நிவாரணமாக இருக்கக்கூடும். ஆனால், உங்கள் நோக்கங்களை அடைவது ஓரளவுக்கு எளிதானதாக இருக்கலாம் என்பதையும் இது குறிக்கிறது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
ஒரு கோணத்தில் பார்த்தால், உங்கள் நட்சத்திரங்கள் உங்களுடைய வெற்றிப் பக்கத்தில் இருக்கிறது. ஏமாற்றப்படுவதற்கோ அல்லது சுரண்டப்படுவதற்கோ வாய்ப்பில்லை. உங்களுக்கு ஒரு இன்றியமையாத செய்தி என்னவென்றால், நீங்கள் உங்களை இலட்சிய முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டு சுயநலத்தை மறந்து, எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்தால், கிடைக்கக்கூடிய எல்லா சூழ்நிலைகளையும் நல்ல நன்மைக்காக மாற்ற முடியும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
ராசி மண்டலங்களின் பலம் இன்னும் உங்கள் பக்கமே இருக்கிறது. இது உங்கள் நலனுக்காக எந்தவொரு வளர்ச்சியையும் ஊசலாட உதவுகிறது. இது எல்லாமே வணிகரீதியானது. வீட்டில் மக்கள் விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், நேரம் பார்த்து, அவர்கள் சொன்னதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
நீங்கள் ஒரு ரகசியத்தை வைத்திப்பீர்கள். ஆனால், அந்த ரகசியத்தை நீங்கள் சிறிது நேரம் மட்டுமே வைத்திருக்க முடியும். இன்றைய நட்சத்திரங்கள் இரட்டைக் கதையைச் சொல்கின்றன. கூட்டாளர்களுடன் பேசும்படி உங்களை வற்புறுத்துகிறது, ஆனால் சில நுட்பமான விஷயங்களுக்கு வரும்போது நீங்கள் நாவடக்கம் தேவை என்று அறிவுறுத்துகிறது. கடைசியாக நீங்கள் இப்போது செய்ய விரும்புவது குற்றத்துகான காரணத்தை ஏற்படுத்துவதாகும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
உங்களுடைய அன்றாட வேலையில் ஜீவிப்பது என்பது பெரியதாக இருக்கிறது. இது உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டிய சிறிய ஆனால் அவசியமான விஷயங்களாகும். உங்கள் சிறந்த முயற்சிகளுக்கு உத்தரவாதம் அளிக்க எந்த எந்த விஷயத்தையும் சிறியதாகவோ அல்லது மந்தமானதாகவோ கருதக்கூடாது. மற்றவர்கள் சலிப்பாக இருப்பதால் வழக்கமான விஷயங்களை விட்டுவிடுவது சரி என்று கற்பனை செய்ய வேண்டாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
சந்திரனின் அமைப்பு மகிழ்ச்சியுடன் உங்கள் ராசியை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியை ஊக்குவிக்கின்றன. இதன் விளைவாக நீங்கள் வழக்கத்தை விட அதிக உணர்ச்சி மிக்கவராக இருக்க முடியும். ஆனால், உணர்ச்சி மேம்பாடுகளைப் பாராட்ட முடியும். நீங்கள் நன்றாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் விரும்பும் நபர்களும் அப்படியே இருக்க வேண்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
பகுத்தறிவில்லாத எதிர்ப்பு வளர்ந்து வருவதை நீங்கள் உணரும்போது, இன்று நீங்கள் அமைதியாக இருப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். தீர்ப்பதற்கு ஒரு குடும்ப மர்மம் இருக்கலாம். ஆனால், நாளைக்கு முன்னதாகவே பதில்கள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
இன்று குழு வேலைகளுக்கு நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. ஒத்துழைக்க முயற்சி செய்யுங்கள், தனியாக செல்வது பற்றி நினைக்ககூட வேண்டாம். நீங்கள் இன்னும் வேலையில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அல்லது வீட்டில் நிராகரிப்பிலிருந்து மீண்டு வந்தால், அடுத்த வாரத்திற்குள் நீங்கள் அதைப் பற்றி எல்லாம் மறந்துவிடுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களுடன் முன்னேறுவதை எந்தவொரு வாதமும் தடுக்கக்கூடாது. கூட்டாளிகளின் ஆலோசனையானது, நல்ல நோக்கத்துடன் இருக்கும்போது, பெரும்பாலும் இந்த விஷயத்தை தவறவிடுவதாகத் தெரிகிறது. எனவே, இன்று உங்கள் சொந்த முடிவுகளை எடுங்கள். நீங்கள் உங்கள் திட்டங்கள் செயல்படவில்லை என்றால் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
இன்று தொலைதூர தொடர்புகளின் சக்திவாய்ந்த அறிகுறிகள் தெரிகிறது. அனேகமமாக, குடும்ப உறவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். நீங்கள் உண்மையில் தொலைதூர பகுதிகளில் வாழ்க்கையை கனவு காண்கிறீர்கள். சிறிது நேரம் கிடைத்தால், தப்பிப்பது நல்லது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
பொதுவான கிரக அறிகுறிகள் சாதகமாக இருக்கின்றன. ஆனால், அதில் ஒரு மாற்றம் என்னவென்றால், உறுதியான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை அடைவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். மற்றவர்கள் உங்கள் திட்டங்களை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நீங்கள் அவர்களுக்கு நல்ல காரணத்தைக் கூறினால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்வார்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
நீங்கள் இனிமேல் ஒரு புதிய தொடக்கத்தை ஒத்திவைக்க வேண்டாம் என்று இந்த ஒருவாரம் கிரகங்களின் போக்கு உங்களை வலியுறுத்துகின்றன. அதில் தனிப்பட்ட தொடர்புகள் உள்ளன. அவை, இப்போது உறுதியான நட்பாக மாற்றப்பட வேண்டும். நெருங்கிய கூட்டாளிகள் உங்களுடன் செல்ல தயாராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது தயாராக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“