Rasi Palan May 19th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 19th May 2021: இன்றைய ராசி பலன், மே 19ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
விமர்சனம், ஆலோசனை இரண்டையும் நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். விஷயம் என்னவென்றால், உங்களுக்கு உதவ முயற்சிக்கும் நபர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பது தெரியும். ஆனால், அவர்களுக்கு அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அவை தவறானவை என்பதால் மட்டுமே, உண்மைகள் என்று அழைக்கப்படுபவைகளை அதன் வழியில் விட்டுவிடாதீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
உங்கள் முன்னேற்றத்தில் ஏதேனும் தாமதங்கள் அல்லது ஏமாற்றங்களை ஏற்க வேண்டும். ஏனென்றால், அற்புதமான முடிவுகளையோ அல்லது வியத்தகு பாய்ச்சலையோ எதிர்பார்க்காமல் கையில் இருக்கும் வேலையைத் தொடர்வது நல்லது. நீங்கள் உங்களுடைய வெகுமதியைப் பெறுவீர்கள். ஆனால், நீங்கள் அதை இன்னும் பெறவில்லை.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
உங்கள் நட்சத்திரங்கள் லாபகரமானதாகவும், வளமானதாகவும் தோன்றுகிறது. எனவே, பணப் புழக்கத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்த முழுமையான தொடர் யோசனைகளை நீங்கள் விரைவில் கொண்டு வருவீர்கள் என்பது ஒரு கட்டம். இரண்டாம் கட்டம் மிகவும் கடினம். நீங்கள் அதை எப்படி கருத்தியலில் இருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப் போகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
நீங்கள் இன்னும் ஓரிரு விஷயங்களை வைத்திருக்க வேண்டும். ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் உங்கள் கருத்துக்கள் சிறிது நேரம் பேசப்படாமல் போகக்கூடும். இருப்பினும், உங்களை வெளிப்படுத்துவதற்கு மிகவும் கடினமானதாக நீங்கள் கண்டால், விரைவில் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
சில நேரங்களில் உங்கள் சொந்த நலனுக்காக, நீங்கள் இயல்பாகவே பெரும்பாலும் மிகவும் வெளிப்படையானவர், நேர்மையானவராக இருக்கிறீர்கள். இருப்பினும், அடுத்த பதினைந்து நாட்களுக்கு நீங்கள் சில உண்மைகளை வைத்திருப்பீர்கள். நீங்கள் தவறாக வழிநடத்தும் எண்ணம் இல்லாத வரை இரகசியங்களில் எந்த தவறும் இல்லை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நீங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். தனிப்பட்ட உறவுகளில் மேலும் ஒரு படி எடுத்துவைக்கும் முன் ஒரு கணக்கைத் தீர்க்க வேண்டும். கடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பது போல் இப்போது தெரிகிறது. உங்களுக்கு பண வெகுமதிகள் தேவையில்லை. ஆனால், உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் அங்கீகாரம் தேவை.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உங்கள் ராசியில் முழுமை உள்ளது. உங்கள் வழியில் வரும் நம்பிக்கையின் எல்லா வெளிச்சத்தைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் உயரத்தை தொட வேண்டும் என்றால், மாற்றம் மட்டுமே நிரந்தரமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகப்படியான ஆரவாரத்துடன் வெளிப்படையான நேர்மையை நீங்கள் விரும்பவில்லை.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
நீங்கள் மேற்கொண்ட அனைத்து கடின முயற்சிகளுக்கும் வணிகம் மற்றும் வேலை சம்பந்தமான கிரகங்கள் வெகுமதிகளைத் தருவதற்கு தயாராக உள்ளன. நீங்கள் நம்பும் ஒருவர் பொருத்தமான வாய்ப்பை வழங்கினால், ஏதோரு நல்லது வரும் என்று காத்திருப்பதைவிட நீங்கள் இப்போது அதை உடனே எடுத்துக் கொள்ளலாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
எந்த சூழ்நிலையிலும் நீங்கள் ஆரம்பத்தில் செய்ததை முயற்சிக்கக்கூடாது. நீங்கள் கடந்த காலம் நிகழ்காலத்திற்கு நன்றாக இருக்கிறது என்று கற்பனை செய்ய தூண்டலாம். ஆனால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்தி புதிய நண்பர்களை உருவாக்கலாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
நீங்கள் அத்தியாவசியமான நடவடிக்கைகளைத் தொடங்கி தனிப்பட்ட முன்னெடுப்புகளை அடைய வேண்டும். நீங்கள் அடுத்த 2 முதல் 4 வாரங்களில் கூட்டாளிகளின் யோசனைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். மேலும், இப்போது ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு அழைப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான வேகத்டை வரையறுக்கலாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
கிரகங்கள் சக்திவாய்ந்த செய்திகளை அனுப்பும் இந்த ஆண்டில் நீங்கள் ஒரு திருப்புமுனையில் இருப்பதைக் குறிக்கும் சில காலங்கள் உள்ளன. இது அதைப் போன்ற ஒரு காலம். அதாவது எல்லா முடிவுகளும் மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், நீங்கள் அந்த முடிவுகளை பின்னர் மாற்ற முடியாது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் தியானம் செய்திருக்க மாட்டீர்கள். ஆனால், இன்று தியானத்தை தொடங்குவதற்கு சரியான தருணம். விசித்திரமான அபிலாஷைகள், கனவுகள் மற்றும் விழிப்பின்மையைக் குறிக்கும் உங்கள் ராசிக்கட்டத்தின் ஒரு பிரிவைக் சுட்டிக்காட்டும் கிரகங்களின் தூய்மையான மற்றும் சரியான சீரமைப்பு உள்ளது. உங்களுக்கான விடை அதற்கு உள்ளே இருக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.