Rasi Palan 27th January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 27th January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 27, 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : ஆச்சரியங்கள் விரைவில் வேகமாகவும் வரத் தொடங்கும். வாழ்க்கை என்பது மேடை ஒத்திகை அல்ல. எதிர்ப்பாரத மாற்றங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஓய்வின்றி உழைத்து வருகிறீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புகிறேன்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21): நேர்மையான முறையில் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த தேவையில்லை. எந்த வகையிலும் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஆனால்,குழந்தைகளும், இளந்தலைமுறைகளும் உங்களை உற்று நோக்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. அதன் சாதக, பாதக விளைவுகளை உற்றுநோக்க வேண்டிய நேரமிது. உங்கள் துணைவியாருடன் கலந்துரையாடுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : உங்கள் கஷ்டங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். முணுமுணுக்க வைக்கும் பல துயர்களை நீங்கள் சந்தித்து வருகின்றீர்கள் என்பதும் தெரியும். இருப்பினும், உங்களை சமநிலைப் படுத்த, உற்சாகப்படுத்த உங்கள் குடும்ப உறவினர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை கண்திறந்து பார்த்தால் தான் தெரியும். விரைவில் வெற்றி வரும்.
கன்னி (ஆக. 24 – செப்டம்பர் 23) : தற்போது நீங்கள் சந்தித்து வரும் பிரச்சைனகள் நீங்கள் பொறுப்பேற்க முடியாது. அதில், உங்கள் தவறு ஒன்றுமில்லை. தற்போதைய மனவருத்தங்கள் தற்காலிகமாக இருக்கலாம். சிறிய தனிமையும் இடைவெளியும் தேவைப்படுகிறது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : ஏக்கமும், எதிர்பார்ப்பும் ஒருவகையான சுழற்சி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சி பற்றிய எதிபார்ப்பு உங்களிடம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. விரைவில் நல்லது நடக்கும். இந்த ஏக்கமும் கடந்து போகும்!
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22): திரைக்குள் இருந்து கொண்டு, காட்சிகள் பற்றி வகுப்பு எடுக்க வேண்டாம். திரையை விட்டு முதலில் வெளியே வாருங்கள். எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய சிறந்த தருணம் இதுவாகும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22): எதிர்கால வாழ்வுக்காக அசாத்திய முடிவுகளை எடுப்பீர்கள். பல்வேறு தடைகளை முறியடிப்பீர்கள்.. உங்களுள் ஒளிந்துள்ள திறமைகள் வெளிப்படும். வேறுபாடுகளை களைவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): மகிழ்ச்சியான நாள். நட்புறவில் இன்பம் காண்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்படும் தடைகளை வெல்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : பணியிடங்களில் நன்மதிப்பு பெறுவீர்கள். புன்னகையினால் அனைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): எதையும் ஒன்றுக்கு பலமுறை கலந்தோலோசித்து முடிவு எடுப்பது நல்லது. நிதி விவகாரங்களில் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். பின்விளைவுகள் பற்றி ஆராய்ந்து செயல்களை துவங்குவது நல்லது.