Rasi Palan 8th March 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 8th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 8ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
இந்த நாள் குறிப்பிடத்தக்க கிரக அம்சங்களால் குறிக்கப்படுகிறது. கிரகங்கள் பெரும்பாலும் உங்களை ஒரு நல்ல மேஷ ராசிக்காரராக கடினமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. எதிர்கால சாதனைகளுக்கு அடித்தளமிடுவதற்கும் அடித்தளத்தை தயார்படுத்துவதற்கும் இது ஏற்ற காலமாக பாருங்கள். நீங்கள் உங்கள் உள்மனது சொல்வதைக் கேட்டு சாதுர்யமாக இருங்கள்!
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
உங்கள் ராசியில் காதல், இன்பம், ஓய்வு மற்றும் நட்பைப் பற்றி கிரகங்கள் இணைந்திருப்பதால் சமூக அழைப்புகள் மேம்படும். நீங்கள், அவற்றை தொடர்வதில் சிரமம்கூட இருக்கலாம். ஆனால், உங்களுக்குத் தெரியாமல் நீங்கள் வேகமாக செயல்படும் தருணங்களும் இருக்கும்!
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
நீங்கள் சுண்டப்பட்டதாக உணரமாட்டீர்கள். நீங்கள் வழக்கத்திற்கு மாறானவர் அல்ல. இதற்கு காரணம் சமீபத்திய மாதங்களில் நீங்கள் ஏதாவது செய்திருக்கலாம். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்தீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்ற உணவுமுறை அல்லது உடற்பயிற்சி ஆகிய விவேகமான முறையைப் பின்பற்றவும். அதே நேரத்தில் உங்கள் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
பொதுவாக பாதிப்பில்லாத கருத்துகள்கூட இன்று உங்களில் தீவிரத்தை கூட்டியிருக்கலாம். விரைவில் முடிவெடுப்பது புத்திசாலித்தனமாக இருந்தாலும், தாமதத்தைத் தவிர்க்க நீங்கள் இன்னும் கொஞ்சம் ஏதாவது செய்யலாம். தற்போதைய அழுத்தத்திற்கு அடிபணிய வேண்டிய கடமையிலிருந்து உங்களை விடுவித்தால் நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
ஒரு பயனுள்ள விவாதம் விரைவில் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். இருப்பினும், உங்களின் நீண்ட கால பாதுகாப்பு குறித்து உங்களுக்கு இன்னும் சில கேள்விகள் இருக்கலாம். அதற்கான பதில், நீங்கள் எவ்வளவு தூரம் உங்களை உண்மையிலேயே மதிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அனேகமாக, ஆச்சரியப்படும் விதமாக, உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
இந்த நேரத்தில் நீங்கள் ஆக்கப்பூர்வமான கற்பனை உத்வேகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, யாரும் உங்களை மந்தமான, கற்பனையற்ற அல்லது சலிப்பை ஏற்படுத்த விடாதிர்கள். ஆக்கப்பூர்வமான கற்பனையை மற்றவர்களை விட நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் செயலை ஒன்றுசேர்ப்பதுதான் – ஏனென்றால் வேறு யாரும் உங்களுக்காக இதைச் செய்ய மாட்டார்கள்!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
இன்றைய சந்திரனின் நிலை உங்கள் ராசிக்கட்டத்தின் மர்மமான மற்றும் குழப்பமான பகுதிகளுடன் இணையாமல், கோள்களின் பொதுவான குழப்பமான விளைவை ஈடுசெய்யும் வகையில், உங்கள் நிலைமையை இன்னும் தெளிவாகக் காண உதவும். நீங்கள் தெளிவான முடிவு எடுக்க முடியும்!
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
கடந்த சில மாதங்களில் நீங்கள் எதிர் பார்க்காத சவால்கள் அல்லது எழுச்சிகளில் ஈடுபட்டீர்கள். இருப்பினும், இப்போதிலிருந்து, கிரகங்கள் உங்கள் ராசிக் கட்டத்தில் சாதகமான பகுதிகளை நோக்கி நீண்ட பயணத்தைத் தொடங்குகின்றன. இது எட்டு வாரங்களில் நல்வாய்ப்பு அலையில் முடிவடைகிறது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
நீங்கள் ஒரு திசையில் எவ்வளவு அதிகமாக இழுக்கிறீர்கள் என்றால், அவ்வளவு அதிகமாக யாரோ ஒருவர் வேறு திசையில் இருந்து இழுப்பார்கள். பிளவுகள், வேறுபாடுகள் மற்றும் சரிசெய்ய முடியாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் உங்கள் ஜாதகத்தின் ஒரு பகுதியில் சந்திரனின் நிலையின் தவிர்க்க முடியாத விளைவு இது!
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
இந்த நாள் பல விஷயங்களில் வழக்கமான நாளாக இருக்க வேண்டும் என்றாலும், நீங்கள் ஒரு குழப்பத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பில்லை. என்றாலும் இது உங்கள் ராசியின் ஆளுமை குறைவான வெளிப்படையான பகுதியாகும். இதில், மிகவும் குறைவான நம்பிக்கைக்குரிய சூழ்நிலைகளில்கூட அதிகமாகப் பலன் பெற முடியும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
சந்திரனின் வடக்கு முனை உங்கள் ராசிக் கட்டத்தின் முக்கியமான பகுதிகளைக் கடந்து செல்கிறது. அன்றாட ஏற்ற தாழ்வுகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் இன்னும் சரியான பாதையில் செல்கிறீர்கள். உங்கள் நிதி விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள், அவ்வளவுதான்!
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்கள் சூரிய கட்டத்தின் முக்கியமான உணர்ச்சிப் பகுதிகளில் செவ்வாய் நகர்கிறது. அதனால்தான் தற்போதைய அனைத்து விவாதங்களும் பரிசீலனைகள் உங்கள் வசதியையும் பாதுகாப்பையும் ஆண்டுக்கணக்கில் இல்லாவிட்டாலும், பல மாதங்களுக்குப் பாதிக்கும். பொறுமையின்மைக்கும் பொறுப்பற்ற தன்மையையும் விடுத்து சமநிலையை கடைபிடிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”