Advertisment

2020 ல் இந்தியாவில், சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் மரணம்; தினசரி சராசரி 328 – NCRB அறிக்கை

1.20 lakh deaths due to negligence in road accidents in 2020, average 328 daily: Data: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்சிஆர்பி -யின் அறிக்கையில், நாடு 2018 -ஆம் ஆண்டு முதல் 1.35 லட்சம் "ஹிட் அண்ட் ரன்" வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
2020 ல் இந்தியாவில், சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் மரணம்; தினசரி சராசரி 328 – NCRB அறிக்கை

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் "சாலை விபத்துக்கள் தொடர்பான அலட்சியத்தால் இறந்தவர்களின்" எண்ணிக்கை 1.20 லட்சம் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது, சராசரியாக ஒவ்வொரு நாளும் 328 பேர் தங்கள் உயிர்களை இழக்கின்றனர். கொரோனா ஊரடங்கின்போதும் இந்த எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சாலை விபத்துக்கள் தொடர்பான அலட்சியம் காரணமாக மூன்று ஆண்டுகளில் 3.92 லட்சம் உயிர்கள் பலியாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தனது வருடாந்திர 'க்ரைம் இந்தியா' அறிக்கையின் 2020 ஆண்டிற்கான புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இதில் 2020 ஆம் ஆண்டில் 1.20 லட்சம், 2019 இல் 1.36 லட்சம், 2018 இல் 1.35 லட்சம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்சிஆர்பி -யின் அறிக்கையில், நாடு 2018 -ஆம் ஆண்டு முதல் 1.35 லட்சம் "ஹிட் அண்ட் ரன்" வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

2020 ல் மட்டும், 41,196 "ஹிட் அண்ட் ரன்" வழக்குகள் உள்ளன, அதே நேரத்தில் 2019 ல் 47,504 மற்றும் 2018 இல் 47,028 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சராசரியாக, கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் 112 "ஹிட் அண்ட் ரன்" வழக்குகள் பதிவாகியுள்ளன.

பொது வழியில் அவசரமாக அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட விபத்துகளில் "காயமடைந்த" வழக்குகள் 2020 ல் 1.30 லட்சம், 2019 ல் 1.60 லட்சம் மற்றும் 2018 ல் 1.66 லட்சம், "கடுமையான காயம்" உடைய வழக்குகள் 2020 ல் 85,920, 2019 ல் 1.12 லட்சம் மற்றும் 2018 ல் 1.08 லட்சம் என தரவு காட்டுகிறது.

இதற்கிடையில், ரயில் விபத்துக்கள் தொடர்பான அலட்சியம் காரணமாக 52 வழக்குகள் நாடு முழுவதும் 2020 ல் பதிவு செய்யப்பட்டன, இது 2019 ல் 55 மற்றும் 2018 ல் 35.

2020 ஆம் ஆண்டில், "மருத்துவ அலட்சியம் காரணமான இறப்புகளில்" 133 வழக்குகளையும் இந்தியா பதிவு செய்துள்ளது, இது 2019 இல் 201 மற்றும் 2018 இல் 218 ஆக இருந்தது என என்சிஆர்பி தரவு காட்டுகிறது.

அறிக்கையில், 2020 ல் "குடிமை அமைப்புகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட இறப்புகள்" 51, அதுவே 2019 ல் 147 வழக்குகள் மற்றும் 2018 ல் 40 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2019 இல் 7,912 மற்றும் 2018 இல் 8,687 ஆக இருந்த "மற்ற அலட்சியத்தால் ஏற்பட்ட இறப்புகள்", 2020 ஆம் ஆண்டில் 6,367 வழக்குகளாக பதிவாகியுள்ளன.

NCRB அறிக்கையில், மார்ச் 25, 2020 முதல் மே 31, 2020 வரை நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது, கொரோனா தொற்றுநோய் காரணமாக பொது இடத்தில் இயக்கம் "மிகவும் குறைவாக" இருந்தது.

"பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்,  திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறைந்துவிட்டன, அதேசமயம் கொரோனா தொடர்பான அமலாக்கத்தின் விளைவாக அரசால் அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமையின் காரணமாக (பிரிவு 188 ஐபிசி)', 'மற்ற ஐபிசி குற்றங்கள் 'மற்றும்' பிற மாநில உள்ளூர் சட்டங்கள் 'கீழ், வழக்குகள் அதிகரித்தன" என்று என்சிஆர்பி குறிப்பிட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment