Advertisment

ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி

சீரம் நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனையை நிறைவேற்றிய நிலையில், பாரத் பயோடெக் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி

 Kaunain Sheriff M 

Advertisment

1 crore health workers to get first dose; PM Modi to hold meeting with CMs today :  கொரோனா வைரஸ் தடுப்பிற்கு முதலில் வெளியாகும் தடுப்பூசியை இந்தியாவில் பணியாற்றும் முதன்மை சுகாதார பணியாளர்கள் 1 கோடி நபர்களுக்கு வழங்கப்படும் என்று அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அறிவித்துள்ளது. இன்று பிதமர் மாநில முதல்வர்களை சந்திக்கும் நிலையில் வெளியான இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்திற்காக உருவாக்கப்பட்ட எக்ஸ்பெர்ட் குழுவின் வட்டாரங்கள், இந்தியாவில் தடுப்பூசியை பெற இருக்கும் முதன்மையான சுகாதார ஊழியர்கள் தொடர்பான தரவுகளை தயாரித்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். உருவாக இருக்கும் தடுப்பூசியை பயன்படுத்த இந்திய அரசு ஒப்புக் கொண்ட பிறகு அவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எங்களுக்கு மாநிலங்களிலிருந்து கணிசமான பதில் கிடைத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொண்ணூறு இரண்டு சதவீதம் தரவுகளை வழங்கியுள்ளன. தனியார் துறை மருத்துவமனைகளில் சுமார் 56 சதவீதம் தரவுகளை வழங்கியுள்ளது. நாங்கள் ஒரு மேம்பட்ட கட்டத்தில் இருக்கிறோம், ”என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரம் தெரிவித்துள்ளது. கள பணியாளர்களில் மொத்த எண்ணிக்கை 1 கோடியாக உள்ளது என்பது தான் தெரிய வந்த விசயம்.

to read this article in English

முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குறித்த தரவுகளை தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த தகவல்கள், பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் தடுப்பூசி நிர்வாகம் குறித்து பேச உள்ள நிலையில் வெளியாக உள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் (இருவரும் எக்ஸ்பெர்ட் கமிட்டியில் தலைவர்களாக உள்ளனர்) ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கப்படம் வழங்குவார்கள் என்று மூத்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஜூலை 2021க்குள் 400-500 மில்லியன் டோஸ்களைப் பெறவும் பயன்படுத்தவும், சுமார் 20-25 கோடி மக்களுக்கு தடுப்பூசியை வழங்கவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேரத்தில் மிகப்பெரிய நோய்த்தடுப்பு இயக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவிட் தடுப்பூசிகள் வரிசையாக இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அக்டோபரில், வைரஸ் மற்றும் வெளிப்பாடு அபாயத்திலிருந்து ஆபத்துக்களை எதிர்கொள்பவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார். இதில் சுகாதார வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்பது உறுதியாகிறது.

மாநிலங்களில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் முன்கள பணியாளர்களான அல்லோதி மருத்துவகள், ஆயுஷ் மருத்துவர்கள், மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் செவிலியர்கள், ஆஷா ஊழியர்கள், மற்றும் ஏ.என்.எம்கள் குறித்த தகவல்களையும் அரசுகள் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

இந்த பிரதான குழுவில் முன்னுரிமை இல்லை. சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க ஆரம்பித்த பிறகு மொத்த 1 கோரி மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நோய்த்தடுப்பு திட்டத்தின் பயிற்சி மற்றும் செயல்படுத்தலில் மருத்துவ மாணவர்கள் மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்.

கடந்த ஒரு வாரத்தில், தடுப்பூசி நிர்வாகம் மற்றும் விநியோகத்திற்கான டிஜிட்டல் தளம் தயாரிக்கப்பட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பங்குதாரர்களுடன் கூட்டு சேர்ந்து நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் ஐந்து தடுப்பூசிகள் மேம்பட்ட கட்டங்களில் உள்ளது. ஒன்று ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சீரம் நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனையை நிறைவேற்றிய நிலையில், பாரத் பயோடெக் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கியுள்ளது. ஜைடஸ் காடிலா இரண்டாம் கட்ட சோதனையை முடித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து சோதனைகளை முடித்து 2 மற்றும் 3ம் கட்ட சோதனைகளை ஆரம்பித்துள்ளது. பைலாஜிக்கல் இ தற்போது ஆரம்ப கட்ட சோதனையில் உள்ளது.

Cold chains - ஐ பெரிதாக்குவது, சிரஞ்சுகள் மற்றும் ஊசிகளை கொள்முதல் செய்தல் போன்ற விசயங்கள் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "தற்போதுள்ள 28,000 குளிர் சேமிப்பு புள்ளிகளிலிருந்து, நாங்கள் இன்னும் 1,000 புள்ளிகளை அரசாங்க வசதிக்குள்ளேயே சேர்த்துள்ளோம். கூடுதல் வாக்-இன் கூலர்கள், வாக்-இன் ஃப்ரிட்ஜ்கள் மற்றும் ஆழமான உறைவிப்பான் ஆகியவற்றை நாங்கள் வாங்குகிறோம்” என்று கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment