Bjp: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் 10 பேர் இன்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தார்கள். இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்தப் பின் தங்களின் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோரம் மாநிலம் நீங்கலாக பா.ஜ.கவைச் சேர்ந்த 21 எம்.பி-க்கள் வேட்பாளர்களாக தேசிய தலைமையால் அறிவிக்கப்பட்டனர்.
இவர்களில், 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து, மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர தோமர், பிரஹலாத் சிங் பட்டேல், ரித்தி பதக், ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகிய 5 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அருண் சாவோ, கோமதி சாய் ஆகிய 2 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யவர்தன் ரத்தோர், தியா குமார், கிரோரி லால் மீனா ஆகிய 3 பேரும் இன்று (டிச.6) தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
இவர்கள் மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு எதிராக சிலர் செயல்பட்டுவந்தனர்.
எனினும் இம்முறையும் அவரே முதல் அமைச்சர் என்று கூறப்படுகிறது. அவருக்கு பிறகு அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முயற்சியும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“