Santhosh Singh
டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக, பீஹாரில் இருந்து திஹாருக்கு 10 தூக்கு கயிறுகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றால் அங்கு பயன்படுத்தப்படும் தூக்கு கயிறு, பீஹார் மாநிலம் பக்ஸார் சிறையில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். அந்தளவுக்கு, தூக்கு கயிறு தயாரிப்பில் பெயர் பெற்றது பக்ஸார் சிறை தயாரிப்பு ஆகும்.
போதிய ஈரத்தன்மையுடன் மிருதுவான பருத்தியினால் ஆன இந்த தூக்கு கயிறுகள், 16 அடி நீளம் கொண்டது. இந்த தூக்கு கயிறு 150 கிலோ எடை கொண்ட மனிதனை தாங்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, பக்ஸார் சிறை நிர்வாகத்திடமிருந்து 10 தூக்கு கயிறுகளை வாங்கியுள்ளது.
2013ம் ஆண்டில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் இடப்பட்ட பின்னர், தற்போது தான் தூக்கு கயிறுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்ஸார் சிறை கண்காணிப்பாளர் விஜய் அரோரா இதுகுறித்து கூறியதாவது, பாட்னாவில் உள்ள சிறைத்துறை தலைமையகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவாக தூக்கு கயிறுகள் தயார் செய்ய உத்தரவு வந்தது. நாங்கள் தயார் செய்துவிட்டோம். ஒரு தூக்கு கயிறு 1.5 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ.2,120 ஆகும்.
பீஹார் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த பக்ஸார் சிறையில் தூக்கு கயிறு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பருத்தி விவசாயம் நடைபெற்று வருவதால், தொழிற்பூங்காவாக மாறியுள்ளது. கங்கை நதிக்கரையில் இந்த பகுதி அமைந்துள்ளதால், இப்பகுதியில் விளையும் பருத்தியில், தூக்கு கயிறு தயாரிக்க தேவையான ஈரத்தன்மை உள்ளது.
அவர் மேலும் கூறியதாவது, பக்ஸார் சிறையில் தயாரிக்கப்படும் தூக்கு கயிறுகள், பாரம்பரிய சிறப்பு கொண்டது. சிறந்த பயிற்சி பெற்ற 10 சிறைக்கைதிகளால் இந்த தூக்கு கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த 10 கைதிகள், மற்ற குழு கைதிகளுக்கு பயிற்சி அளிப்பர். இவ்வாறாக பயிற்சி அளிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூக்கு கயிறுக்கு எப்போது தான் ஆர்டர் வருகிறது என்றாலும், நாங்கள் அதற்காக தனி யூனிட்டையே நடத்தி வருகின்றோம். தூக்கு கயிறு தவிர்த்து மற்ற ஆடை வகைகளையும் நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.
தூக்கு கயிறு தயாரிக்க தாங்கள் J34 வகை பருத்தியையே பயன்படுத்தி வருகின்றோம். இந்த வகை பருத்தி, வடமாநிலங்களில் அதிகமாக விளைகின்றது. 1800 நூற்கற்றைகளை கொண்ட 4 பருத்தி இழைகளை கொண்டு தூக்கு கயிறு தயாரிக்கின்றோம். 16 அடி கொண்ட ஒரு தூக்கு கயிறு, 150 கிலோ எடை வரை உள்ள மனிதனை தூக்கிலிட வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்துக்கு முன்பு, தூக்கு கயிறு தயாரிக்க மணிலா பருத்தியையே பயன்படுத்தி வந்திருக்கிறோம். தற்போது J34 வகை பருத்தியை, கங்கை நீரால் பதப்படுத்தினாலே, அந்த மிருதுத்தன்மை கிடைத்து விடுவதால், இந்த J34 வகை பருத்தியையே பயன்படுத்த துவங்கியுள்ளோம்.
தூக்கு கயிறு தயாரிப்பை நாங்கள் கலையாக பார்க்கின்றோமே தவிர, பணம் கொழிக்கும் தொழிலாக ஒருபோதும் பார்க்கவில்லை. பக் ஸார் தூக்கு கயிறுக்கு வரலாற்றில் எப்போதும் தனித்த ஒரு இடம் உண்டு என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.