10% இட ஒதுக்கீடு : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்... விரைவில் சட்டமாக்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parliament, 10% இட ஒதுக்கீடு

Parliament, 10% இட ஒதுக்கீடு

பொதுப் பிரிவினரில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து, விரைவில் சட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

Advertisment

பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மக்களவை நிறைவேறிய நிலையில்,மாநிலங்களவையில் இது தொடர்பாக புதன்கிழமை விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

10% இட ஒதுக்கீடு

இரவு 10 மணிக்கு மேல் நடந்த இந்த வாக்கெடுப்பில் பொதுப் பிரிவினரில் பின் தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 124 வது திருத்த மசோதா அருதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக 7 பேரும் வாக்களித்தனர்.

Advertisment
Advertisements

திமுக, அதிமுக எம்.பி.க்கள் முன்னதாக இந்த மசோதாவை எதிர்த்துப் பேசினர். திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

சி.பி.ஐ (எம்) உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசியபோது திமுக உறுப்பினர் கனிமொழி அதை எதிர்த்து கோஷமிட்டார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவர் கையெழுத்திட்டதும் இது சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Parliament Rajya Sabha Lok Sabha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: