புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வரும் வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்று டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார்
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வா்த்தகா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் காவல் துறை ஆலோசனைக் கூட்டம் தனியார், விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு காவல் துறைத் தலைவா் அஜித்குமார் சிங்லா தலைமை வகித்தார். துணைத் தலைவா்சத்தியசுந்தரம் முன்னிலை வகித்து வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்..
அப்போது பேசிய சத்திய சுந்தரம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்து புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவதற்கு உப்பளம் பகுதியில் புதிய துறைமுக வளாகம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி, பழைய துறைமுக வளாகம், ஒதியன்சாலை பழைய பேருந்து நிலையம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி, நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகம், முத்தியால்பேட்டை வாசவி பள்ளி, கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளி, புதிய பேருந்து நிலைய வளாகம் ஆகியவை தோ்வு செய்யப்பட்டுள்ளன.போக்குவரத்து பிரச்னைகளை தீா்க்கும் வகையில் 10 நாள்கள் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.
வரும் 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை முதல் மறுநாள் வரை ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. அப்பகுதியில் வசிப்போர், விடுதிகளில் பணிபுரிவோர் உள்ளிட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்,புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில் மொத்தம் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என கூறிள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“