/tamil-ie/media/media_files/uploads/2020/07/image-2020-07-06T064238.732.jpg)
டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 106 வயது நிரம்பிய முதியவர், வெற்றிகரமாக நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக இவரின் மனைவி, மகன் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.
1918ல் ஸ்பானீஷ் ஃப்ளூ என்று பெருங்கொள்ளை நோயால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 6,75,000 நபர்கள் உயிரிழந்ததாக வரலாற்று ஆவனங்கள் தெரிவிக்கிறது.
கொரோனா தொற்றில் இருந்து குணமாகிய 106 வயது நிரம்பிய முதியவர், தனது நான்காவது வயதில் 1918 ஸ்பானிஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி மருத்துவ வாட்டாரங்கள் தெரிவிக்கையில், " குணமடைந்த முதியவர் உலகின் இரண்டு பெருங்கொள்ளை நோயை சந்தித்தவர். தற்போது,கொரோனா நோயிலிருந்து இவர் குணமடைந்த விதம் ஆச்சரியப்பட வைக்கின்றது. உண்மையில், 70 வயது நிரம்பிய தனது மகனை விட இவர் விரைவாக நோயில் இருந்து மீண்டு வந்தார்" என்று தெரிவித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.