புதுச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கல்யாணசுந்தரம் செய்தி மற்றும் விளம்பரம் துறை சம்பந்தமாக பேசிய போது, புதுச்சேரியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். புதுச்சேரியில் இயங்கும் பிரஸ் கிளப் பத்திரிகையாளர் மன்றத்தை கடந்த ஐந்து ஆண்டுகள் மூடி கிடக்கின்றது.
துறை செயலாளராக இருந்த வல்லவன் பல அரசியல் செய்து அந்த மன்றத்தை நிரந்தரமாக மூடிவிட்டார். எனவே புதுச்சேரி முதலமைச்சர் இதற்கு ஒரு தீர்வு கண்டு மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் மானிய விலையில் லேப்டாப் வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் போலி பத்திரிகையாளர்கள் உலா வருகின்றனர். அவர்களை அரசு கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“