/tamil-ie/media/media_files/uploads/2019/01/a360.jpg)
10th CBSE Results 2019 Kerala man hit son
10th CBSE Results 2019 Kerala man hit son : திங்கள் கிழமையன்று வெளியானது சி.பி.எஸ்.சி 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள். திருவனந்தபுரம் மண்டலம், சென்னை மண்டலம் முதலிடம் பிடித்தது. கேரளாவில் ஒரு மாணவன் 6 பாடங்களில், முதல் மதிப்பெண் பெற்றிருந்த போதிலும், எஞ்சிய பாடங்களிலும் ஏன் முதல் மதிப்பெண் பெறவில்லை என்று மகனை, தந்தையே மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
அனைத்து பாடங்களிலும் ஏன் முதல் மதிப்பெண் எடுக்கவில்லை என்று தாக்கிய தந்தை
கேரள மாநிலம் கிளிமனூர் பகுதியை சேர்ந்தவர் சாபு (வயது 43). இவரது மகன் இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். கடந்த திங்கட்கிழமை ( மே 6ம் தேதி) 6 பாடங்களில், அவன் முதல் மதிப்பெண் ( A plus) பெற்றிருந்தும், எஞ்சிய பாடங்களில் ஏன் முதல் மதிப்பெண் பெறவில்லை எனக்கூறி, அவனை, சாபு மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதில் அவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, மகனும், அவன் தாயும் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இவர்களது புகாரின் பேரில் சாபு கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார். நீதிபதி, சாபுவை 14 நாட்கள் போலீஸ் வைக்க உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.