Advertisment

தமிழகத்தில் 1.46 மடங்கு கூடுதல் மரணங்கள் : ஏப்ரல் - மே மாதங்களில் இறப்பை அதிகரித்த கொரோனா

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், 2019ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும், இந்த ஆண்டு ஏற்பட்டு இறப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

author-image
WebDesk
New Update
Covid death count

 Amitabh Sinha 

Advertisment

Covid death count : கொரோனா இரண்டாம் அலையின் போது எத்தனை பேர் உயிரிழந்தனர்?

முன்பு எப்போதும் இல்லாத வகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சுகாதார பேரழிவை அறிந்து கொள்வதற்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் மறு எழுச்சியை கட்டுபடுத்துவதற்கான கொள்கையை உருவாக்கவும் இது மிகவும் முக்கியமான கேள்வியாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் உறவினர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு என்பதை ஆகஸ்ட் 14ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதால் இது நடைமுறையில் மிகவும் அவசியமான கேள்வியுமாக உள்ளது.

மத்திய அரசுக்கு மாநில அரசுகள், இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட இழப்புகளை அறிக்கையாக அறிவித்துள்ளது. அதன்படி 1.69 லட்சம் நபர்கள் கொரோனா இரண்டாம் அலையில் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகளை ஒருவர் தெரிவிக்கலாம்.

ஆனால் நிறைய இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர்கள் குழு நடத்திய விசாரணை அறிவிக்கிறது. ஆனால் எவ்வளவு இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியாது. இவ்வளவு பேர் இறந்திருக்கலாம் என்ற மதிப்பீடு மட்டுமே வழங்க முடியும். அதுவும் குறைந்தது ஒரு வருடத்தில் இந்தியா அதன் இறந்தவர்களைக் கணக்கிடும் விதத்தில்.

விசாரணையின் ஒரு பகுதியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மாநில அரசுகளை அணுகிறது. அதில் 8 மாநிலங்கள் - கடந்த வாரத்தில் ஏற்பட்ட இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இறப்புகளை பதிவு செய்த மாநிலங்கள் - ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சி.ஆர்.எஸ் முறைப்படி, இறந்தவர்களின் தரவுகளை வழங்கியுள்ளது.

Covid death count

வெளியிடப்படாத இந்த தரவானது 2019ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஏன் என்றால் அப்போது கொரோனா தொற்று இல்லை. இந்த தரவுகள் கொரோனா மரணங்கள் தவிர்த்து இதர காரணங்களுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் 2.04% அதிகமாக உள்ளது என்பதை குறிக்கிறது.

இந்த எழுச்சியானது குறைந்தபட்சமாக 1.23 (கேரளா) மடங்கில் இருந்து அதிகபட்சமாக 2.92 மடங்கு வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா மரணங்களை இதில் இருந்து நீக்கிவிட்டால், எழுச்சி விகிதம் அனைத்து மாநிலங்களிலும் குறைகிறது. கேரளாவில் 1.12 மடங்கும், மத்திய பிரதேசத்தில் 2.86 மடங்கு வரை குறைகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் 1.87 மடங்கு வரை குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை மூன்று வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது

முறை 1

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் ஏற்பட்ட இறப்பு விகிதம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. எனவே, அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இறப்பு விகிதம் அதிகரித்திருக்கும் என்று நினைக்க கூடாது.

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு மாநிலங்களில் கணிசமாக வேறுபடுகிறது (விளக்கப்படம் பார்க்கவும்). அவர்களின் அதிகாரப்பூர்வ கோவிட் இறப்பு புள்ளிவிவரங்கள் கழித்து, எழுச்சி விகிதம் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2.86 மடங்கு மத்திய பிரதேசத்திற்கும், 2.03 மடங்கு பீஹாரிலும், 1.21 மடங்கு ஜார்கண்டிலும், 1.73 மடங்கு பஞ்சாபிலும், ஹரியானாவில் 2.44 மடங்கும், 1.4 மடங்கு டெல்லியிலும், 1.37 மடங்கு கர்நாடகாவிலும், கேரளாவில் 1.12 மடங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறை இரண்டு

கொரோனா இரண்டாம் அலையின் போது உச்சம் பெற்ற இறப்பு விகிதங்கள், இரண்டாம் அலை உச்சம் இல்லாத மாதங்களில் (ஜனவரி - மார்ச் 2021) அதிக அளவு இறப்புகளை காணவில்லை. எனவே ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட இறப்புகளின் மடங்குகள் முழு ஆண்டுக்குமான கணக்கான கருதப்பட கூடாது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே 2021 இல் இறப்பு எண்ணிக்கை எட்டு மாநிலங்களில் 1.23x முதல் 3.12x வரை இறப்பு விகிதங்கள் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், 2019ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும், இந்த ஆண்டு ஏற்பட்டு இறப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஜார்க்கண்ட் ஒரு விதிவிலக்கு: இறப்பு எண்ணிக்கை ஐந்து மாதங்களிலும் அதிகமாக உள்ளது.

முறை மூன்று

ஒப்பீட்டளவில் சிறந்த அறிக்கையிடல் தரங்களைக் கொண்ட மாநிலங்களில் இறப்பு விகிதங்கள் குறைவாகவே உள்ளது. உதாரணத்திற்கு கேரளா. ஏப்ரல்-மே 2021 இல் ஏற்பட்ட மொத்த இறப்புகள் 2019 ஏப்ரல்-மே மாதங்களில் ஏற்பட்ட இறப்புகளைக் காட்டிலும் 1.12 மடங்கு மட்டுமே அதிகம். ஜார்கண்ட் (1.21 மடங்கு), கர்நாடகா (1.37 மடங்கு) மற்றும் டெல்லி (1.4 மடங்கு) மாநிலங்களைக் காட்டிலும் சற்று குறைவு

சிவில் பதிவு அமைப்பு, 2019 அடிப்படையில் இந்தியாவின் முக்கிய புள்ளிவிவரங்கள் பற்றிய அறிக்கையின்படி டெல்லி, கர்நாடகா, மற்றும் கேரளாவில் 100% இறப்பு பதிவு நிலை (Level of Registration of deaths) மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

100% நிலை என்றால் அனைத்து மதிப்பிடப்பட்ட இறப்புகளையும் அரசு பதிவு செய்துள்ளது, குறைந்த அளவு என்பது நிர்வாகத்தின் திறமையின்மையை சுட்டுகிறது. ஜார்கண்ட் 84% மதிப்புடன் மேலும் ஒரு விதிவிலக்காக செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை மிகவும் குறைவாக உள்ளது: மத்திய பிரதேசம் 78%, பஞ்சாப் 88%, பீகார் 89%, ஹரியானா 90%.

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இறப்புகளுக்கான ஆரம்ப சிஆர்எஸ் தரவை வழங்க முடியாது என்று கூறிய மாநிலங்களில், பல்வேறு காரணங்களுக்காக மரணம் அடைந்தவர்களின் தரவுகளை வேறொரு வழியில் பெற்றது இந்தியன் எக்ஸ்பிரஸ். மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதார பணி மூலம் பராமரிக்கப்படும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு உடல்நலம் மற்றும் குடும்ப நலன் தரவுகளை ஆய்வு செய்தது.

2008ம் ஆண்டு நிறுவப்பட்ட எச்.எம்.ஐ.எஸ்.-ல் இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் சுகாதார வசதிகளிலிருந்து சேவை விநியோக தகவல் ஒவ்வொரு மாதமும் பதிவேற்றப்படுகிறது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8.31 லட்சம், அதாவது 2.11 மடங்கு அதிகமாக உள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகளில் 60%-த்தை பதிவு செய்த மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் குஜராத்தில் (3.62 மடங்கு) அதிகப்படியாக மரணங்கள் பதிவாகியுள்ளது . குறைவாக மேற்கு வங்கத்தில் 1.46% பதிவாகியுள்ளது. கொரோனா மரணங்களை இதில் இருந்து நீக்கும் பட்சத்தில் இந்த மடங்கானது 3.29 (குஜராத்) முதல் 1.33 மடங்கு (மேற்கு வங்கம்) வரை குறைந்துள்ளது.

ஆனால் HMIS தரவுகளும் எச்சரிக்கையுடன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

உதாரணத்திற்கு, பீகாரில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்பட்ட இறப்புகள் 2034 என்று எச்.எம்.ஐ.எஸ்-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பதிவு செய்யப்பட்ட 3,587 மரணங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. HMIS இறப்பு எண்ணிக்கை ஏப்ரல்-மே 2021 க்கான சிஆர்எஸ் இறப்பு எண்ணிக்கையின் சதவீதமாக ஏப்ரல்-மே மாதங்களில் பீகாரில் 2% முதல் கர்நாடகாவிற்கு 72% வரை மாறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment