புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை

உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களைவிட்டு விலகி இருங்கள். நன்றாக காற்று வசதி உள்ள அனைத்து அமைப்புகளிலும் வெளிப்புறக் காற்றுடன் போதுமான காற்றோட்டம் உள்ள இடங்களில் இருக்குமாறு சுகாதார துறை பரிந்துரைக்கப்படுகிறது.

உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களைவிட்டு விலகி இருங்கள். நன்றாக காற்று வசதி உள்ள அனைத்து அமைப்புகளிலும் வெளிப்புறக் காற்றுடன் போதுமான காற்றோட்டம் உள்ள இடங்களில் இருக்குமாறு சுகாதார துறை பரிந்துரைக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
covid

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை புதுச்சேரி சுகாதாரத்துறை கண்டுபிடித்து  அவர்களை தனி தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

Advertisment

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள குறிப்பில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறையின், அறிவுறுத்தலின் படி புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கும் அனைத்து ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது. இதுவரை கொரோனா தொற்று கடந்த வாரத்தில் 12 பேருக்கு உறுதி  செய்யப்பட்டுள்ளது அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் என்பது மற்ற சுவாச வைரஸ் போன்றது,  கடந்த காலத்தில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றின் அறிகுறிகளான ஜலதொஷம், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏதேனும் இருப்பின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அரசு. புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம் போன்ற சுவாச நோய்த்தொற்றுகளின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல வழித்துறை, குடிமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தொற்று பரவாமல் தடுக்கவும் செய்ய வேண்டியவை. செய்யக்கூடாதவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது. செய்ய வேண்டியவை: நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது, கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்

Advertisment
Advertisements

உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களைவிட்டு விலகி இருங்கள். நன்றாக காற்று வசதி உள்ள அனைத்து அமைப்புகளிலும் வெளிப்புறக் காற்றுடன் போதுமான காற்றோட்டம் உள்ள இடங்களில் இருக்குமாறு சுகாதார துறை பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பைக் கட்டுப்படுத்துங்கள்நிறைய தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை உண்ணவும்

டிஷ்யூ பேப்பர் & கை குட்டை (கர்சீஃப்) மீண்டும் மறுபயன்பாடு செய்யாதீர்கள். நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு அவர்கள் பயன்படுத்திய துண்டுகள், கைத்தறி போன்றவற்றைப் பகிர்தல். கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல் கூடாது பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருந்து எடுக்க வேண்டாம்.

புதுச்சேரியில் தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நபர்களை சிகிச்சை செய்வதற்கு புதுச்சேரிஅரசு பொது மருத்துவமணை, புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுரி, புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமணை ஆகிய இடங்களில் நான்குசுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை இயக்குனரகம் புதுச்சேரி அரசு நலவழித்துறை விடுக்கும் பத்திரிகை செய்தி குறிப்பு படுக்கைகள் பிரோத்தியமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெண்டிலேட்டர் மற்றும் பிராணவாவு வசதிகளோடு புதுச்சேரி கோரிமேட்டில் அமைந்துள்ள மார்பு நோய் மருத்துவமணையில் பிரோத்தியமாக 6 (ஆறு) படுக்கைகள் கொண்ட வார்டு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை மற்றும், புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் புது தில்லி உடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.எனவே பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் யாவரும் பயப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Covid 19

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: