அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது: பெற்றோர்களுக்கு உதவ ஹெல்ப் லைன்

போலி விசா மூலம் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 129 பேர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க, போலி விசாவில் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்ற பெயரில் போலீசாரால் உருவாக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் சேர 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

இந்திய மாணவர்கள் கைது

இதற்காக அமெரிக்காவில் உள்ள ஏஜெண்டுகள் சிலர் அந்த பல்கலைக் கழகத்தில் பயிற்றுவதாகக் கூறி, 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை கமிஷன் வாங்கிக் கொண்டு F1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதன் விளைவாக போலி விசா பெற்று அமெரிக்காவில் தங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு 129 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மீட்பதற்காக, சுஷ்மா சுவராஜ் தலைமையில் வெளியுறவுத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வழியாக 24 மணி நேரமும் நடவடிக்கை சேவையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மாணவர்களை மீட்டுத் தருமாறு பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும், மாணவர்களின் பெற்றோர் மேலே குறிப்பிட்டு தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close