கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவா் பலி: புதுச்சேரியில் சோகம்

புதுச்சேரி பனித்திட்டு கடல் முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது.

புதுச்சேரி பனித்திட்டு கடல் முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது.

author-image
WebDesk
New Update
dead

புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தமிழரசன் - உமா தம்பதியின் இளைய மகன் சபரீஸ்வரன் (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாா். 

Advertisment

மாசி மகத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று தங்களது பொழுதை கழித்தனர். நேற்று தனது நண்பா்கள் 5 பேருடன் சபரீஸ்வரன், பனித்திட்டு கடல் முகத்துவாரப் பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, எதிா்பாராதவிதமாக சபரீஸ்வரன் முகத்துவாரம் பகுதியில் ஆழமான பகுதியில் குளித்த போது திடீரென கடலில் மூழ்கி மாயமானாா். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சபரீஸ்வரனை சடலமாக மீட்டனா். அவனது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது.

தொடா்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து, பாகூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். நண்பர்களுடன் குளிக்க வந்த மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: