கடந்த மூன்று ஆண்டுகளில் 131 வீரர்களின் தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளில் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளது.
ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 28ஆவது பட்டாலியனைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் ஒரு பயிற்சி பட்டறையில் உள்ளனர். அந்த பயிற்சி பட்டறையானது பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காணவும், அவர்களின் மனநல கவலைகளுக்கு தகுந்தவாறு பயிற்சி அளிக்கவும் வடிவமைக்கப்பட்டது.
இதுபோன்ற முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம், மற்றும் நல்வாழ்வைச் சுற்றியுள்ள நடவடிக்கைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் பயிற்சி அளிக்கிறது.
இந்த பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு, ’ஆணாதிக்கத்தின் சுமை’ உள்ளிட்ட பாலின வேறுபாட்டு பிரச்சனைகளை உணர்த்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும்போது தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைய முடியும்.
பயிற்சியில் அவர்கள் ஒரு குடுவையில் இருந்து ஏதேனும் ஒரு சீட்டை எடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள டாஸ்க்கை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் செய்ய முடியும் என்று அவர்கள் நம்பினால் அறையின் மையத்திற்கு வரும்படி கேட்டார்கள். ஹவல்தார் வினோத் குமார் கையில் இருந்த சீட்டைப் பார்த்து உறுதியுடன் அறையின் மையத்திற்கு முன்னேறுகிறார் மேலும் சீட்டைப் பார்த்து ‘பணம் சம்பாதித்து முதலீடு செய்யுங்கள்’ என்று அவர் படிக்கிறார்.
இந்த குழுவில் 43 வயதான ஹவல்தார் குமார் 23 ஆண்டுகளாக சேவையில் இருக்கிறார். அவர், ’இது ஒரு சிப்பாய்க்கு எங்கள் கடமைகளை செய்ய முக்கியமான பயிற்சி’, என்று கூறுகிறார். மேலும் அவர் பெண்கள், வியாபாரத்தில் முதலீடு செய்வதைக் கண்டுள்ளார். அதுவே அவரை அறையின் மையத்திற்கு நடக்க வைத்தது என்கிறார். மேலும், என் மனைவி இமாச்சலில் வீட்டில் துணிகளைத் தைக்கிறாள். நான் இங்கே வேலை செய்கிறேன். ஆனால் எப்போதும் வீட்டைப் பற்றி கவலைப்படுகிறேன். இந்த பயிற்சியின் மூலம் நான் நேர்மையாக இருக்க கற்று கொள்கிறேன். என்று கூறுகிறார். மேலும் அவர், பாதிக்கப்பட்டவர் என்பதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டிருக்கிறேன். இதனால் ஒரு சக ஊழியர் துன்பத்தில் இருப்பதைப் பார்த்தால் என்னால் அவரை கையாள முடியும். நாங்கள் ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
இந்த பயிற்சியின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஸ்ரீநகரின் சிஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சாரு சின்ஹா கூறுகையில் ஒரு ஜவான் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தனது குடும்பம் இல்லாமல் செலவழிக்கிறார், அவர்களுடன் தகவல் தொடர்பும் பாதிக்கப்படுகிறது. இதனால் பலர் குடும்பத்தினருடன் ஒன்றிணைய முடியவில்லை, என்கிறார்.
மேலும், ஒரு வீரர், குடும்பத்திற்காக செயல்பட முடியாது. இதை எவ்வாறு சரி செய்வது என்பது அவர்களில் யாருக்கும் தெரியாது. வீட்டில் உறவுகளிடம் அதிருப்தி இருக்கும். முகாம்களுக்குள் வாழ்வது எளிதல்ல. ஒரு சூட்கேஸ் உடன் இருக்க வேண்டும் தனி அறைகள் கிடையாது.
2008க்கு முன்னர் ஒரு முழு பட்டாலியன் ஒன்றாக நகரும், ஆனால் இப்போது உறுப்பினர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு மாறுகிறார்கள் இதனால் ஒரு ஜவான் மற்றவர்களுடன் துண்டிக்கப்படுவதை உணர முடியும் உங்கள் நண்பர்கள் பிரிகிறார்கள். குடும்பத்திலிருந்தும் வேலையிலும் தனித்து தனிமையில் இருப்பார்கள். எனவே இந்த மாதிரியான வாழ்க்கையை கையாள எங்கள் வீரர்களுக்கு நாங்கள் எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது எனக்கு முன் இருந்த பிரச்சனை என்று அவர் கூறினார்.
சின்ஹா 2018ல் பீகாரில் இருந்த காலத்தில் இந்த உரையாடல்களைத் தொடங்கினார், ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் ஸ்ரீநகரில் 14 நாள் பயிற்சியாக இந்த திட்டம் வடிவம் பெற்றது ஆரம்ப கட்டத்தில் படைப்பிரிவின் 48 அதிகாரிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் பட்டறைகள் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐ.ஜியின் கூற்றுப்படி ஒரு ஜவான் தனது எண்ணங்கள் உணர்ச்சிகள் மற்றும் பதில்களைப் புரிந்து கொள்ள முடியும்.ஆனால் அவனுக்கு இருக்கும் அச்சங்கள் என்னவெனில் அவன் கொல்லப்படுவான் அல்லது வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டான் என்பதே. இதைக் கையாள உதவுவதே இதன் நோக்கம். ஒரு வீரன் கடமையைச் செய்து கொண்டிருக்கும்போது அவனால் உணரப்பட்ட வலிகள் அதிகமாக இருக்கும்போது தற்கொலை எண்ணங்கள் எழும் என்று சின்ஹா கூறுகிறார்.
இரண்டாம் கட்டமாக 500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பட்டறைகள் நடத்துவதற்கும பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கல் 25,000க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பாடத்திட்டத்தை பெங்க்ளூரில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீடம் வடிவமைத்துள்ளனர். மேலும் ஏழு நாள் பயிலரங்கில் உள்ளடக்கப்பட்ட பாடங்களில் பின்வருவன அடங்கும். எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்துக்கொள்வது, அறிவாற்றல் சிதைவுகள், கோபம் மற்றும் நம்பிக்கை குடும்ப ஈடுபாட்டை வளர்ப்பது மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு
பெண்களை சமமாக மதித்து வீட்டிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதால், தனது அடுத்த விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் களத்தில் உள்ள ஜவான் அதை பற்றி தொடர்ந்து சிந்திக்காமல் நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையையும் செய்வதற்காக இந்த பயிற்சி உதவுகிறது. முதன்மை பயிற்சியாளர்களில் ஒருவரான துணை கமாண்டர் துளசி டோக்ரா கூறுகையில், சமூகத்தின் எழுதப்படாத விதிகள் எப்படியாவது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. மேலும் இந்த பட்டறையில் ஆண்கள் மற்றும் பெண் வீரர்கள் இருவரையும் உள்ளடக்கியிருப்பதால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கல் கவலைகளைப் புரிந்துக்கொள்கிறார்கள்.
குமாரைப் போலவே கான்ஸ்டபிள் பசுதேவ் ரேவும் ’பைக் சவாரி’ என்று இருக்கும் சீட்டைப்பிடித்து மையத்திற்கு முன்னேறினார். அஸ்ஸாமைச் சேர்ந்த 35 வயதான அவர் தனது சொந்த ஆழமான சில சார்புகளை அறியவில்லை என்று ஒப்புக்கொள்கிறார். நாங்கள் எங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கிறோம் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தை நான் புரிந்துக் கொண்டேன் இதை நான் எனது குடும்பத்தினரிடம் கூறுவேன் அவர்கள் மற்றவர்களிடம் சொல்வார்கள் எல்லா நேரத்திலும் நான் அவ்வளவு அழுத்தத்தை உணர மாட்டேன், என்று அவர் கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.