Advertisment

மக்களவை பாதுகாப்பு மீறல்: அமித் ஷா அறிக்கை அளிக்க குரல் கொடுத்த 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

டிஎன் பிரதாபன், ஹிபி ஈடன், ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Lok Sabha

டிசம்பர் 14, 2023, வியாழக்கிழமை, புது டெல்லியில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, பிஜேடி எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவைக்குத் தலைமை தாங்குகிறார்.

mp-kanimozhi | நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கையை வெளியிடக் கோரி நடவடிக்கைகளை முடக்கியதற்கு மத்தியில் 14 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானங்களை மக்களவை வியாழக்கிழமை (டிச.14) நிறைவேற்றியது.

Advertisment

இதையடுத்து, தவறான நடத்தை மற்றும் தலைவரின் அதிகாரத்தை அலட்சியம் செய்தல் உள்ளிட்ட குற்றஞ்சாட்டுகளின் பேரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், ஹிபி ஈடன், ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ், ஜோதிமணி ஆகியோர் நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னர், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், கே.ஸ்ரீகண்டன் மற்றும் முகமது ஜாவேத்; சிபிஎம் எம்பிக்கள் பி.ஆர்.நடராஜன், எஸ்.வெங்கடேசன், திமுகவின் கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன், சி.பி.ஐ.யின் கே.சுப்பராயன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு சபை மீண்டும் தொடங்கியபோது, மேலும் ஒன்பது எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தனித் தீர்மானத்தை ஜோஷி முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சபை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் வாசிக்க : 14 MPs suspended from Lok Sabha amid Opposition calls for Amit Shah statement on security breach

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mp Kanimozhi Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment