14 percent Death by Covid 19 are below 45 yrs in Mohali : கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டில் அதிக உயிர்களைக் கொள்வது மட்டுமல்லாமல், 45 வயதிற்கு உட்பட்ட ஏராளமான மக்களையும் பாதிக்கிறது.
தற்போது நோய்த்தொற்று காரணமாகப் பஞ்சாப் மாநில மொஹாலி மாவட்டத்தில் பதிவான மொத்த இறப்புகளில், 14 சதவீதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள்.
கோவிட் -19 காரணமாக மே 12 வரை மொஹாலி மாவட்டத்தில் 722 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 624 நோயாளிகள் (86 சதவீதம்) 45 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 98 பேர் (14 சதவீதம்) 45 வயதுக்குக் குறைவானவர்கள் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவிட் நோயால் 17 நோயாளிகள் இறந்ததால்,, மாவட்டத்தில் மிக அதிக ஒரு நாள் இறப்புகளைக் கண்டது. செவ்வாயன்று ஒன்பது இறப்புகளும் புதன்கிழமை ஏழு இறப்புகளும் கண்டது. இந்த மோசமான எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் எண்ணிக்கை அதிகரித்தது.
மக்கள் தடுப்பூசி போட வேண்டும் அதனால், வைரஸ் பரவுவதை நிறுத்த முடியும். தடுப்பூசி போடுவதற்காக அதிகபட்ச மக்களை அணுகுவதற்கு நிர்வாகம் அல்லா விதமான முயற்சிகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறது என்றும் அவர்கள் இரண்டு டோஸேஜ் வசதிகளையும் தொடங்கியுள்ளது என்றும் டி.சி கிரிஷ் தயாளன் கூறினார். "45 வயதிற்கு உட்பட்டவர்களின் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. இது கவலைக்குரியது. இறப்பு விகிதத்தைக் குறைக்க இளைஞர்களுக்குத் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
45 வயதிற்குட்பட்டவர்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறுவதால், அவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடுவது கட்டாயம். "கடந்த இரண்டு மாதங்களில் இவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி மற்றும் வைரஸை முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை அதை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிகள். வரும் நாட்களில், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், இறப்பு விகிதம் மேலும் உயரக்கூடும்” என்று டி.சி. தயாளன் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil