சபரிமலையில் 26ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு

பத்தினாம்திட்டா மாவட்ட ஆட்சியர் நிலக்கல், பம்பை, மற்றும் சபரிமலை சந்நிதானத்தில் போட்டிருந்த 144 தடை உத்தரவை நீட்டித்தார்.

By: November 23, 2018, 2:11:59 PM

சபரிமலை 144 தடை உத்தரவு : சபரிமலை ஐயப்பனிற்கு விரதம் இருந்து, மாலையிட்டு, இருமுடியுடன் கோவிலிற்கு செல்லும் சீசன் இது.  செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்த உத்தரவினைத் தொடர்ந்து பெண்களின் வழிபாட்டிற்கு ஒப்புதல் அளித்தது கேரள அரசு. அதனை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள், பந்தளம் ராஜ குடும்பத்தினர், தலைமை தந்திரி குடும்பத்தினர் மற்றும் இந்து அமைப்ப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து மறு சீராய்வு மனுக்கள் போடப்பட்டன. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுக்களை ஜனவரி மாதம் விசாரிக்கின்றோம் என்று கூறிவிட்டது.

சபரிமலை 144 தடை உத்தரவு நீட்டிப்பு

கோவிலுக்கு வரும் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து கொண்டதை தொடர்ந்து பம்பை, நிலக்கல், இலவுங்கல் மற்றும் சபரிமலை சந்நிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார் பத்தினம்திட்டா ஆட்சியர். கடந்த வாரம் ஒரு வாரத்திற்கான 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். அந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவோடு முடிவிற்கு வர, அந்த உத்தரவினை 26ம் தேதி வரை நீட்டி அறிவித்திருக்கிறார்.

தடை பிறப்பிக்கப்பட்டதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தனியார் வாகனங்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டு, அமைச்சரை கேரள மாநில அரசின் பேருந்தில் வைத்து சபரிமலைக்கு அனுப்பினார் ஐ.பி.எஸ் யதீஷ் சந்திரா. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:144 rule extended till 26th of november in sabarimala andb pamba

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X