சிறார் சிறையில் இருந்து தப்பிய 15 சிறுவர்கள்! வெளிவந்த சிசிடிவி காட்சி!!!

ஹைதராபாத்தில் உள்ள சிறார் சிறையில் இருந்து 15 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் தேடுதல் வேட்டைத் துவக்கம்.

ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் அமைந்துள்ளது சிறார் சிறையின் முகாம். இந்த முகாமில் பல்வேறு குற்றப்பிரிவுகளில் கைதான 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி இரவு 1.30 மணியளவில் 15 சிறுவர்கள் சீர்திருத்த முகாமில் இருந்து தப்பியோடினர். இவர்கள் அந்த முகாமில் உள்ள ஜன்னல்களில் இரும்பு கம்பிகளை பிளேடால் அறுத்துத் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சிறுவர்கள் மாயமானதைத் தொடர்ந்து முகாமின் காவலர் போலீசாருக்கு தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, ஜன்னலின் கம்பிகள் அறுக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடி காட்சிகளை ஆராய்ந்தபோது அவர் தப்பியோடியது அதில் பதிவாகியிருந்தது.

மேலும் இவர்கள் தப்பியோடிய இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள இரண்டு வாகனங்கள் மாயமானதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே அந்த இரண்டு பைக்குக்களை உபயோகப்படுத்தித் தப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இரங்கியுள்ளனர். 15 சிறுவர்களையும் கண்டு பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளது காவல்துறை.

×Close
×Close