New Update
00:00
/ 00:00
மிசோரம் மாநிலத்தில் உள்ள ஐஸ்வால் முழுவதும் இன்று (மே 28, 2024) பல்வேறு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, மிசோரம் முதல்வர் லால்துஹோமா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “காலை 11.15 மணி நிலவரப்படி உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 15 ஆகும்.
இதில், ஐஸ்வால் மாவட்டத்தின் மெல்தும் மற்றும் ஹ்லிமென் இடையே கல் குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 11 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் உடல்கள் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளன” என்றார்.
மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளையில், மூன்றாவது இடத்தில் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் அவர், “நிவாரணப் பணிகளுக்காக ரூ.15 கோடியை அனுமதித்துள்ளோம், இன்றே இறந்தவர்களின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்குவோம். புயல் தற்போது குறைந்துள்ளது, ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில் சிக்னல் மிகவும் மோசமாக உள்ளது, அதனால்தான் தகவல்களை சேகரிப்பது மற்றும் பதிலளிப்பது கடினம்” என்றார்.
மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பள்ளிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் தவிர அனைத்து பள்ளிகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் துறை அலுவலகங்களும் முடிந்தவரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையை கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மிசோரம் தவிர, அசாம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செவ்வாய்கிழமை புயல் வீசுகிறது. புயலில் சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால், அசாமின் ஹஃப்லாங் மற்றும் சில்சார் இடையேயான சாலை இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் வாசிக்க : 15 killed in landslides in Mizoram; more workers trapped at stone quarry collapse site, says CM Lalduhoma
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.