15 years old Bihari girl cycled 1200 km with her father impresses Ivanka Trump : கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் தங்களின் வேலைகளை இழந்து சொந்த ஊர் செல்லும் வழி தெரியாமல் திணறி வருகின்றனர். பிகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதிகுமாரி தன்னுடைய அப்பாவை சைக்கிளில் வைத்து 1200 கி.மீ பயணித்து கூர்கோனில் இருந்து தர்பங்கா வந்து சேர்ந்தார்.
இவருடைய அசாத்திய துணிச்சல் அனைவராலும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்பின் மகள், ஜோதி குமாரிக்கு வாழ்த்துகள் கூறி ட்வீட் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க : அப்பாவை சைக்கிளில் அமர்த்தி 1200 கி.மீ பயணம் ; 15 வயது சிறுமியின் பாசப் போராட்டம் வென்றது!
அதில் ”15 வயதான ஜோதிகுமாரி உடல் நலமற்ற தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 தூரத்தை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அவரின் அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடமும் இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது” என மேற்கோள் காட்டியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ”அந்த சிறுமியின் சாதனையை வெறுமையாக கொண்டாடுகிறோம். ஆனால் அந்த சிறுமிக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய மறுத்துவிட்டது. அவரின் வறுமையையும் விரக்தியையும் மட்டும் புனிதப்படுகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“