Advertisment

மகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் : காந்தியை முன்னோடியாக எடுத்துக் கொண்டு வாழ்ந்த தலைவர்கள்!

மனித உறவுகளை இணைக்கும் ஒப்பந்தமாக அகிம்சைதான் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஆம் ஆண்டு  அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி.

Advertisment

தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார்.

தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பிறகு 1894-ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906-ம் ஆண்டு ஜோகார்னஸ்பர்க் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார்.

காந்தி முதன்முதலாக இந்தியாவுக்குத் திரும்பியபோது, காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான தேசியவாத இயக்கத்தை உருவாக்குவதில் திவீரமாக சிந்தித்துக் கொண்டி இருந்தது.  இதன் ஆரம்பமே  கடைசியில் காந்தி, பிரிட்டிஷ்  சமாம்ராஜ்ஜியத்திற்கு எதிர்ப்பு குரலாக அமைந்தது.

காந்தியை முன்னோடியாக கொண்ட தலைவர்கள்:

1.  மார்டின் லூதர் கிங்:

மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தியின் மீதும், அவரது அகிம்சைப் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு. அன்னல் காந்தியின் உருவப்படத்தை அவர் வீட்டில் மாட்டி வைத்து வணங்கினார். காந்தியடிகளின் வழிகளில் அதிக நம்பிக்கை வைத்த அவர் தனது போராட்டங்களில் வன்முறை தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டார்.

சம உரிமைக்கோரும் இயக்கங்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். தனது இயக்கத்தை மிக கன்னியமாக அவர் நடத்திய முறையைப் பார்த்து சில வெள்ளையினத்தவரும்கூட அவரைப் பாரட்டினர். ஆனால் பல எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவரது வீட்டிற்கெதிரே குண்டுகள் வீசினர்.

அமெரிக்காவின் ரகசிய போலீசார் அவரை தற்கொலை செய்துகொள்ளுமாறு மிரட்டியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் தனது அமைதிப் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தார் லூதர் கிங்.

2.  நெல்சன் மன்டேலா :

தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவரும் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியவருமான நெல்சன் மன்டேலா.

செயலே சிறந்த சொல் என்பதை நிரூபித்த காந்தியைப் போலவே மண்டேலாவும் வாழ்ந்திருக்கிறார். 27 ஆண்டுக் காலச் சிறைவாசத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்பதைக் காட்டினார். நெல்சன் பெரும்பாலான மக்களால் வாழும் காந்தி என்றும் அழைக்கப்பட்டார்.

3.தலாய் லாமா:

திபெத்திய தலைவர் தலாய்லாமா காந்தியை அதி திவீரமாக நேசித்தவர். முதன்முறையாக தலாய் லாமா இந்தியா வந்த போது காந்தியின் சமாதிக்கு தான் சென்றார். அப்போது அவர் பகிர்ந்துக் கொண்டவை, “ மகாத்மா காந்தி மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. மனித இயல்பை நன்கு அறிந்த சிறந்த மனிதர் அவர். மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்துவதிலும் எதிர்மறை எண்ணங்களை விலக்குவதிலும் குறியாக இருந்தவர்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து காந்தியின் கருத்துகளால் நான் ஈர்க்கப்பட்டவன். வன்முறையற்ற அகிம்சை நிலை என்பது வன்முறை இல்லாத நிலையன்று. அது உண்மையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றார்.

பிறரையும் நம்மைப் போல நினைத்தால் எந்த துன்பதற்திற்கும் இடமில்லை அல்லவா? அந்தக் கருத்தை முன்வைத்துள்ள காந்தியின் போதனைகள் எக்காலத்திற்கும் ஏற்புடையவை. எதிர்காலத்தில் மனித உறவுகளை இணைக்கும் ஒப்பந்தமாக அகிம்சைதான் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்.”

4. எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கான் :

மிருகத்தனமாக மக்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பயமின்றி போர்க்குரல் உயர்த்தியவர் கான் அப்துல் கஃபார் கான். விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய பங்கு என்ன என்பதில் தெளிவாக இருந்தார் கஃபார் கான். ஆதரவற்று நிற்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ஒன்றுபட்ட சுதந்தர இந்தியா உருவாகவேண்டும்.

" நான் வன்முறையையில் ஈடுபடுவதையும், பழி வாங்குவதையும் எப்பொழுதும் செய்ய மாட்டேன் என வாக்களிக்கிறேன். என் செல்வம், வாழ்க்கை, சுகங்கள் ஆகியவற்றை இந்தத் தேசம், மக்களுக்காகத் தியாகம் செய்வேன்."கஃபர் கானிற்கு காந்தி மீது அலாதியான பிரியம் இருந்தது. காந்தியை நாக்பூரில் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டுப் பரவசம் பொங்க ஊர் திரும்பினார்.

1969 ஆம் ஆண்டில், காந்தியின் 100 வது பிறந்த நாள் விழாவில், கான் இந்தியாவிற்கு வருகை தந்தார். செய்தார் அப்போது பாராளுமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தினார். "காந்தியின் நிலத்தை நான் பார்க்க வந்தேன். அவரின் கொள்கைகளை பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள விரும்பினேன், "என்று கூறினார்.

Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment