/tamil-ie/media/media_files/uploads/2020/09/image-24.jpg)
உத்தரபிரதேசம் பல்லியா மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சரோஜ் என்ற சிறுமி, தனது வங்கி கணக்கில் 10 கோடி வரவு வைக்கபட்டதை கண்டு அதிரிச்சியடைந்தார்.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்தார். அதில்,"கான்பூர் தேஹத் மாவட்டத்தைச் சேர்ந்த நீலேஷ் குமார் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் நிதி பெறுவது தொடர்பாக தனது ஆதார் விவரங்களையும், புகைப்படத்தையும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். 2018 முதல் பன்ஸ்டி நகரில் உள்ள அலகாபாத் வங்கி கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
கடந்த திங்களன்று வங்கிக்குச் சென்று விசாரித்த போது, வங்கிக் கணக்கில் 9.99 கோடி வரவு இருப்பதாக வங்கி அதிகாரிகள் சிறுமியுடன் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர், தனது பெற்றோர் உதவியுடன் காவல் நிலையம் சென்று அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்ஸ்டி காவல் நிலையம் தெரிவித்தது.
2022ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவின்போது, நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மொத்தம் 3 கோடி வீடுகளையும் நகர்ப்புறங்களில் மொத்தம் 1 கோடி வீடுகளையும் கட்டித் தருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கின் கீழ் கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.