17-year-old Kerala girl delivers baby : கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் வீடியோக்களை பார்த்து குழந்தை பெற்றுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்கள் தன்னுடைய அறையிலேயே இருந்த அவருக்கு தொற்றுகள் ஏற்பட பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மலப்புரம் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர், வழக்கறிஞர் ஷஜேஷ் பாஸ்கருக்கு இந்த விவகாரம் பற்றி மருத்துவமனை மூலம் தெரிவிக்கப்பட்டது. பிறகு காவல் நிலையத்திலும் தொடர்பு கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த பெண் உடல் நலம் தேறி வருகிறார். கைக்குழந்தை நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியதற்காக அதே பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஆணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய பாஸ்கர், “அந்த பெண் கர்ப்பமாக இருந்ததையோ, குழந்தை பெற்றுக் கொண்டதையோ அவருடைய அம்மா அறிந்திருக்கவில்லை. 50 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் அம்மா பார்வை திறன் அற்றவர். அப்பெண்ணின் தந்தை இரவு நேர காவலராக பணியாற்றுகிறார். கையில் மொபைல் போனுடன் தன்னுடைய அறைக்குள் சென்ற பெண் வெகு நேரமாக வெளியே வரவே இல்லை. ஆன்லைன் வகுப்பில் பிஸியாக இருந்ததாக அவருடைய அம்மா நினைத்துக் கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் சூழ்நிலையை பயன்படுத்தி அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய அந்த நபர், யூடியூப் சேனலை பார்த்து தொப்புள் கொடியை அகற்றுமாறு அறிவுரை கூறியதாகவும் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இளம்பெண் மற்றும் வாலிபர் இருவரும் சேர்ந்து, இந்த கர்ப்பத்தை மறைக்க முடிவு செய்துள்ளனர். கர்ப்பமடைந்த மூன்றாவது மாதத்தில் வயிறு வலிக்கிறது என்று கூறி தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு கேஸ்ட்ரிக்ஸ் தொடர்பான சிகிச்சைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையின் ஒரு முக்கிய பங்காக டி.என்.ஏ.பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil