Advertisment

இளையவர்கள், அதிகம் படித்தவர்கள், சிறந்த பாலின விகிதத்தில் எம்.பி.க்கள் 17-வது மக்களவை

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அதில் 78 பேர் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Parliament

முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 260 என பாதிக்கு கீழே இருந்தது. அதே போல, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்தைய மக்களவையை விட அதிகமாக இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

17-வது லோக்சபா கடைசி கூட்டத்தை சனிக்கிழமை நடத்தியபோது, பல நாடுகளை விட, இன்னும் குறைவாக இருந்தாலும், சிறந்த கல்வி கற்றவர்கள், மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில், அதிகரித்த பாலின விகிதத்துடன் கூடிய இளையவர்கள் உறுப்பினர்களாக இருந்த லோக்சபா என்று தரவுகள் காட்டுகிறது. மேலும், முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 260 என பாதிக்கு கீழே இருந்தது. அதே போல, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்தைய மக்களவையை விட அதிகமாக இருந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Younger, more educated and better gender ratio in 17th Lok Sabha

17-வது லோக்சபாவில் 70 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் குறைவாகவும், 40 வயதுக்கு குறைவானவர்கள் அதிகமாகவும் உள்ளனர், எம்.பி.க்களின் சராசரி வயது 54 ஆக இருந்தது. 40 வயதுக்குட்பட்ட எம்.பி.க்களின் விகிதம், முதல் லோக்சபாவில் 26 சதவீதமாக இருந்த நிலையில், 16-வது லோக் 8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், 17வது லோக்சபா இந்த நீண்ட கால போக்கை மாற்றி கிட்டத்தட்ட 12 சதவீதமாக உயர்ந்தது.

கியோஞ்சர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.டி கட்சியின் சந்திராணி முர்மு, 2019-ல் 25 ஆண்டு, 11 மாதங்கள் வயதில், தேர்ந்தெடுக்கப்பட்ட லோக் சபாவின் இளைய உறுப்பினராவார். மேலும், சம்பல் தொகுதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஷஃபிகுர் ரஹ்மான் பர்க், 89 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த எம்.பி ஆவார். அதே நேரத்தில், 17-வது மக்களவையில் 400 பட்டதாரி எம்.பி.க்கள் இருந்தனர்.

2019 மக்களவைத் தேர்தலில் 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அதில் 78 பேர் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது இந்த எண்ணிக்கை 77 ஆக உள்ளது. 2014-ல் 62 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் லோக்சபாவி 5 சதவீதத்திலிருந்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை ஒரு நிலையான ஆனால் மெதுவாக உயர்ந்து இந்த மக்களவையில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment