புதுச்சேரியில் தீயணைப்பு துறையில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள 62 காலிப் பணியிடங்கள் அதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த கோப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அதன் பேரில் தலைமை செயலர், துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில் தீயணைப்பு துறையின் 62 காலி பணியிடங்களில் சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி, தீயணைப்பு வீரர்கள் பணிகள் நிரப்பப்படவுள்ளது.
இதில் 1 பெண் சப்- இன்ஸ்பெக்டர், 1 பெண் நிலைய அதிகாரி, 16 தீயணைப்பு பெண் வீராங்கனை என 18 காலி பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் முதன்முறையாக தீயணைப்பு துறையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. தற்போது தீயணைப்பு வீரர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த மாதம் தீயணைப்புத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“