/indian-express-tamil/media/media_files/VqVajM2VHrRVWLtAMsWr.jpg)
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் ரூ.13.6 கோடி மதிப்புள்ள 19 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: 19 kg gold worth Rs 13 crore stolen from bank in Telangana
ராயபர்த்தி மண்டலத்தில் உள்ள வங்கிக் கிளையின் ஜன்னலை எரிவாயு கட்டர்களால் அறுத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பிரதான லாக்கர் அறையில் இருந்த சுமார் 19.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கொள்ளையடிக்கப்பட்டதைக் கவனித்து, காவல்துறையில் புகார் அளித்தனர், அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சி.சி.டி.வி கேமரா பழுதடைந்து காணப்பட்டது மற்றும் வங்கியில் இருந்த டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (டி.வி.ஆர்) கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.