19 symptomatic coronavirus patients protested for shifting them to Sood Dharmashala from PGI Chandigarh - கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை மாற்றம் - போராட்டத்தில் பச்சிளம் குழந்தை | Indian Express Tamil

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை மாற்றம் – போராட்டத்தில் பச்சிளம் குழந்தை

போராட்டத்தையும் மீறியும் அவர்கள்  சூட் தர்மசாலாவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

19 symptomatic coronavirus patients protested for shifting them to Sood Dharmashala from PGI Chandigarh
19 symptomatic coronavirus patients protested for shifting them to Sood Dharmashala from PGI Chandigarh

19 symptomatic coronavirus patients protested for shifting them to Sood Dharmashala from PGI Chandigarh : கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நோயாளிகளை காப்பாற்றுவதற்கு இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனாலும் ஆங்காங்கே நிர்வாகத்திறன் குறைபாடுகள் காரணமாக சில தர்மசங்கடமான சூழல்கள் நிலவி வருகிறது.

சண்டிகரில் அறிகுறிகள் அற்ற 19 கொரோனா வைரஸ் நோயாளிகளை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று வழியுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சண்டிகர் பீ.ஜி.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர்களை, சண்டிகரின் செக்டார் 22-ல் அமைந்திருக்கும் சூட் தர்மசாலா மருத்துவமனைக்கு இடம் மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அந்த 19 நோயாளிகளும் மருத்துவமனை வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண் ஒருவர் தன் பச்சிளம் குழந்தையை வளாகத்தில் படுக்க வைத்துவிட்டு அவரும் போராட்டத்தில் இறங்கினார். அவர்களும் மேலும் ஒரு குழந்தை போராட்டத்தில் பங்கேற்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த புகைப்படங்களை எடுத்தது எக்ஸ்பிரஸ் புகைப்பட செய்தியாளர் ஜெய்பால் சிங்.

போராட்டத்தையும் மீறியும் அவர்கள்  சூட் தர்மசாலாவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: 19 symptomatic coronavirus patients protested for shifting them to sood dharmashala from pgi chandigarh