அமெரிக்காவில் 19 வயது கேரளப் பெண் சுட்டுக்கொலை

19-year-old Kerala girl shot dead in US as bullets pierce through ceiling: அமெரிக்காவில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் அலபாமா மாகாண தலைநகர் மாண்ட்கோமெரியில் 19 வயது கேரள பெண் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மரியம் சூசன் மேத்யூ என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​மேல் மாடியில் இருந்து தோட்டாக்கள் கூரை வழியாக துளைத்து அவளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

மாண்ட்கோமெரி காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு அமெரிக்காவின் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலய மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜான்சன் பாப்பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியம் சூசன் மேத்யூ வீட்டின் மேல் தளத்தில் வசிப்பவரின் துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டாக்கள் அவரை துளைத்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரியம் சூசன் மேத்யூ கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் பகுதியைச் சேர்ந்த போபன் மேத்யூவின் மகள் ஆவார். சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்து உடலை கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 19 year old kerala girl shot dead in us as bullets pierce through ceiling

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express