டெல்லி பொருளாதார குற்றப் பிரிவ காவலர்களால் நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும் சோபியா சிங் ஆகியோர் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வருமான வரித்துறை அதிகாரிகள் அல்லது சிறை அதிகாரிகள் எங்களை தடுக்க மாட்டார்கள்.
நாங்கள் சிறையில் சுகேஷ் சந்திர சேகரை சுதந்திரமாக சந்திப்போம் என இந்த இரு நடிகைகளும் கூறியுள்ளனர். இதில் 15 சிறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்துள்ளது.
இது குறித்து தற்போது விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி, முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிங்கி இரானி மற்றும் ஒப்பனையாளர் லீபாக்ஷி எல்லவாடி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்னர் விசாரித்தனர்.
இதற்கிடையில், குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் மற்றும் பிங்கியின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சனிக்கிழமை திகாருக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உட்பட மற்றவர்கள் சாட்சிகளாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து, சிறப்பு காவல் ஆணையர் (குற்றம்) ரவீந்திர யாதவ் கூறுகையில், “சுகேஷ் முதன்மையாக சிறைக்குள் இருந்து செயல்படுவதை நாங்கள் கண்டறிந்தோம். சிறைக்குள் இருந்து பல நடிகைகளை ஏமாற்றியுள்ளார்.
இரண்டு நடிகைகளும் வாக்குறுதியளிக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்ததாகவும், ஆனால் ஏமாற்றப்பட்டதாகவும் கூறினார்கள்.
இரண்டு நடிகைகளும், இடைத் தரகர் சுகேஷ் மண்டோலி சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, நடிகைகள் சிறைக்குள் எப்படி நுழைவார்கள், சுகேஷை எங்கே சந்திப்பார்கள் என்ற விவரங்களை விசாரணைக் குழுவிடம் பகிர்ந்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தக் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தம்போலி பிக் பாஸ் மற்றும் கத்ரோன் கே கிலாடி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார், மற்றவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
சுகேஷ் தென்னிந்திய திரைப்படங்களின் மிகவும் செல்வாக்கு மிக்க தயாரிப்பாளராகக் காட்டிக்கொண்டார். பிரபல இயக்குனர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், திரைப்படங்களை தயாரிப்பதாகவும் கூறுவார்.
நடிகைகளை சந்திப்பதே அவரது நோக்கமாக இருந்தது. இதற்கு ஊடகவியலாளர் பிங்கி இரானி அவர்களைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது,
இதற்கிடையில், சுகேஷை சந்திக்க அவரது உதவியாளர்களும் நடிகைகளும் சொகுசு கார்களில் வருவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், “சிறை பாதுகாப்பு நீண்ட காலமாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை யாரும் தடுக்கவில்லை. இந்த வழக்கில் சில அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகேஷ் மீது அதிமுக சின்னம் பெற டிடிவி தினகரன் மற்றும் வி.கே. சசிகலாவை அணுகினார் என்றும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற புகாரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“