Advertisment

ஜம்மு-காஷ்மீர் என்கவுன்ட்டர்: 2 கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் மரணம்

என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, இருப்பினும் அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
Jammu and Kashmir encounter

நவம்பர் 22, 2023 புதன்கிழமை, ரஜோரி மாவட்டத்தில், கலாகோட் பகுதியில் பயங்கரவாதிகளுடன் என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு அருகே ராணுவ அதிகாரி ஒருவரின் உடலை ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் எடுத்துச் சென்றனர்.

militants | jammu-and-kashmir | ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை (நவ.22)காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தக் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு ராணுவ வீரர்களில் இரண்டு ராணுவ கேப்டன்களும் அடங்குவர். இறந்தவர்களில் 3 பேர் 63 ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் கேப்டன் எம்வி பிரஞ்சல் மற்றும் 9 PARA இன் கேப்டன் ஷுபம் மற்றும் ஹவில்தார் மஜித் ஆவார்கள்.

Advertisment

மேலும், காயமடைந்த மேஜர் உதம்பூரில் உள்ள கட்டளை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நிலையாக இருப்பதாக அறியப்படுகிறது.
இந்தச் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கெல்லப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6-8 வரை ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், எல்லையோர ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களை உள்ளடக்கிய பிர் பஞ்சால் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிக்க பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத குழுக்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது எல்லையோர கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 கிராமங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

ஆங்கிலத்தில் வாசிக்க : 2 Army captains among 4 soldiers killed in Jammu and Kashmir encounter

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jammu And Kashmir Militants
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment