இந்திராவதி தேசிய பூங்காவில் என்கவுன்டர்; 2 ஜவான்கள், 12 மாவோயிஸ்டுகள் மரணம்: சத்தீஸ்கர் காவல்துறை

இந்திராவதி தேசிய பூங்காவில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை; 2 ஜவான்கள், 12 மாவோயிஸ்டுகள் மரணம்: மேலும் 2 ஜவான்கள் காயம் அடைந்துள்ளதாக சத்தீஸ்கர் காவல்துறை தகவல்

இந்திராவதி தேசிய பூங்காவில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை; 2 ஜவான்கள், 12 மாவோயிஸ்டுகள் மரணம்: மேலும் 2 ஜவான்கள் காயம் அடைந்துள்ளதாக சத்தீஸ்கர் காவல்துறை தகவல்

author-image
WebDesk
New Update
maoist encounter

பாதுகாப்பு படைவீரர்கள் (பிரதிநிதித்துவ படம் – எக்ஸ்பிரஸ் காப்பகங்கள்)

Jayprakash S Naidu

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவில் நடந்த என்கவுன்டரில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: 2 jawans, 12 Maoists killed in gunfight at Indravati National Park: Chhattisgarh Police

பூங்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு அந்த இடத்தை நோக்கிச் சென்றதை அடுத்து இந்த என்கவுன்டர் நடந்தது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜவான்கள் மாவட்ட ரிசர்வ் காவலர் படை மற்றும் சிறப்பு அதிரடிப் படை என மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற மாநில அளவிலான படைகளைச் சேர்ந்தவர்கள் என்பதை பஸ்தர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ்.பி உறுதிப்படுத்தினார்.

Advertisment
Advertisements

"மற்ற இரண்டு ஜவான்கள் காயம் அடைந்துள்ளனர், மேலும் அவர்களை சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு கொண்டு ஹெலிகாப்டர் வந்துக் கொண்டிருக்கிறது" என்று ஒரு அதிகாரி கூறினார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை, போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை, இடைவிடாத துப்பாக்கிச் சூடு நடந்தது, துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்து வருகிறது.  துப்பாக்கிச்சூட்டில் சில நக்சல்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. எங்களின் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திராவதி தேசிய பூங்காவில் ஜனவரி 12 அன்று மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும்.

அபுஜ்மத்தை ஒட்டிய தேசிய பூங்கா பகுதி, மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. 2,799.08 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள இந்த பூங்கா, மகாராஷ்டிராவுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது மற்றும் 1983 இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இதுவரை, 62 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு 11 ஜவான்களும் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு பிஜாப்பூரைச் சேர்ந்த 5 பேர் உட்பட ஒன்பது பொதுமக்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

Chhattisgarh Maoist

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: