Advertisment

அசாம் கலவரம் : ”மற்றவர்களுக்கு உதவத்தான் போராட்டத்திற்கு அவன் சென்றான்... ஆனால்?"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2 killed in Assam in CAB protests, Sam Stafford

2 killed in Assam in CAB protests

Tora Agarwala

Advertisment

2 killed in Assam in CAB protests :  வியாழக்கிழமை அன்று கௌஹாத்தியின் லதாசில் மைதானத்தில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சாம் ஸ்டஃபோர்ட் சென்றார். அந்த நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அசாம் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜுபீன் கார்க் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். 17 வயது சாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த மியூசிக் பேண்ட் மற்றும் மியூசியன் கார்க்கை பார்க்கவும் தான் அந்த போராட்டத்திற்கு சென்றார் சாம்.

மதியம் 3 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடந்து வந்தது. பின்னர் சாம் அவருடைய நண்பர்களுடன் ஹதிகவுன் பெதபரா என்ற பகுதியில் அமைந்திருக்கும் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஆனால் வருகின்ற வழியில் டையர்கள் எல்லாம் எரிக்கப்பட்டு, ரோட் டிவைடர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, கல்லால் அடித்துக் கொண்டு போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது.

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

அவர்கள் ஹைதிகௌனிற்கு திரும்பிய பின்னர் 500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பிக் கொண்டு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் தெரு விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது. ”அவன் அவனுடைய உயிரை காப்பாற்ற ஓடினான். அந்த சம்பவம் மிகவும் பயங்கரமாக இருந்தது” என்கிறார் சாமின் நண்பர் இபதுல் ஹொக்யூ.

பாதுகாப்புத்துறையினர் துப்பாக்கியால் சுடத்துவங்கினார்கள். நாங்கள் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டால் காயம் அடைந்ததை கேட்டோம். பின்பு தான் தெரிந்தது சாம் தான் உயிரிழந்தான் என்று. அவனுடைய வாயை குண்டு துளைத்து சென்றது என்று தன்னுடைய நண்பன் மரணம் குறித்து இபதுல் பேசினார். சாமின் நண்பர்கள், உறவினர்கள், ஊர்மக்கள் அனைவரும் அவருடைய வீட்டில் சாமின் பிரேதத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். கௌஹாத்தி அரசு மருத்துவமனையில் இருந்து அவருடைய பிரேதம் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது.

சாம் அந்த போராட்டத்தில் பங்கேற்றது மற்றவர்களுக்கு உதவி புரியதான். ஏன் என்றால் அவன் எப்போதும் அப்படி தான். சிரித்த வண்ணமாக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், மற்றவர்களுக்கு உதவுவான். அவன் தான் சாம். என்னையும் போராட்டத்தில் கலந்து கொள்ள அவன் வற்புறுத்தினான் என்று கூறுகிறார் 15 வயது செனாஜ் அகமது. உன்னை காப்பாற்றவே உன்னுடன் நானும் போராடுவேன் என்று செனாஸூக்கு சாம் ஆறுதல் கூறினார்.

அவனுக்கு குடியுரிமை சட்டம் என்றால் என்ன என்று முழுமையாக தெரியுமா என்று கூட தெரியவில்லை. அனைவரும் போராட்டத்திற்கு சென்றார்கள். அவனும் உடன் சென்றார். மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த அரசோ எங்களின் கோரிக்கைகளை கேட்ககூட முன்வரவில்லை. அவர்கள் ஏதேனும் நல்லது செய்வார்கள் என்று தான் நாங்கள் வாக்களித்தோம். ஆனால் அவர்கள் எங்களுடைய சகோதரனை கொன்றுவிட்டனர் என்று சாமின் உறவினர் டோலி தேக்கா கூறுகிறார்.

பல்குனி ரபா அசாமி இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் சாமின் நண்பர்கள் “அவனுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த நகரின் பல்வேறு இடங்களில் தபலா வாசிக்க விருப்பம் தெரிவித்து அதற்காக அவன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்தான். அசாமின் இசைக்காக ஒரு யூட்யூப் சேனலை அவன் துவங்க விரும்பினான் என்றும் கூறுகின்றனர்.

சிட்டிசன்ஷிப் அமெண்ட்மெண்ட் பில் குறித்து நாங்கள் ஏதும் அதிகமாக விசாரிக்கவில்லை. ஆனால் வங்கதேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக இந்தியா வந்தியவர்கள் அசாம் மாநிலத்தை கையகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை என்று ஹொக்யூ கூறினார். ஸ்டஃபோர்டின் உடல் அவருடைய  வீட்டிற்கு கொண்டு வரவும், அங்கு சாமிற்கு மிகவும் விருப்பமான மியூசியன் கார்க்கும் அங்கு வந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணிக்கு கௌஹாத்தி அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி 26 நபர்கள் அதிக காயத்துடன் அனுமதிக்கப்பட்டனர். 11 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாமுடன் உயிரிழந்த மற்றொரு நபர் திபஞ்சல் தாஸ். 21 வயதான இவர் சாய்னிக் பவன் கேண்டனில் பணியாற்றி வந்தார். இவர் உலுபரி பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment