புதுச்சேரியில் பல்வேறு பயனாளிகளுக்கு ரூபாய் 2000 கோடிக்கு மேல் வங்கிகள் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி உதவி வழங்கினார்
மத்திய அரசுத் நிதியுதவித் திட்டங்களின்கீழ், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி இலாசுப்பேட்டை, தாகூர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், உள்துறை அமைச்சர் . நமச்சிவாயம், பொதுப்பணி அமைச்சர் க. லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் க. ஜெயக்குமார், மத்திய நிதி அமைச்சக , பயனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரி அரசு சரித்திரத்தில் இன்றைய நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். நிதி அமைச்சரின் உதவியோடு ஒரே நேரத்தில் ரூ. 2,000 கோடிக்கு மேல் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா வேகமாக வளர்ச்சி பெறுவதற்கு பிரதமரின் வழிகாட்டுதலில் மத்திய நிதி அமைச்சர் முன்னெடுத்த முயற்சிகள் முக்கிய காரணமாக இருக்கிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“