பிரதமர் மோடி இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டட வடிவமைப்பாளர் பிமல் படேல், இதை வடிவமைத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முக்கோண வடிவம்
இந்த புதிய கட்டிடம் முக்கோண வடிவதில் உள்ளது. பிமல் படேலை பொருத்தவரையில், பல்வேறு மதங்களில் இந்த வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார். பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் அம்சங்களை நினைவுப்படுத்தும் வகையில் புதிய பாராளுமன்றத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இருக்கும். இந்த இரண்டு கட்டிடமும் ஒன்றாகத்தான் செயல்பட உள்ளது.
கட்டிடத்தின் பரப்பளவு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 3 மாடிகள் உள்ளன. 64, 500 சது மீட்டர் கொண்டது. லோக் சபா நடைபெறும் பகுதியில் தற்போது 888 இருக்கைகள் உள்ளன. இதுபோல இந்த இருக்கைகளை 1,272 ஆக அதிகப்பட்டுத்தி கொள்ளலாம். மத்தியில் இருக்கும் ஹால் அல்லது அறை இல்லை என்றால், லோக் சபா மற்றும் ராஜா சபா உறுப்பினர்களை சேர்த்ந்து ஒரே நேரத்தில் கூட்டம் நடத்த முடியும்.
நுழைவாயில்
மூன்று நுழைவாயிலும், 3 பக்கங்களில் அமைந்துள்ளது. குறிப்பாக குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற அவைத் தலைவர், பிரதமர் உள்ளே நுழைய வசதியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் மற்றும் புதிய பாராளுமன்றத்தை காண விரும்பும் நபர்கள், பி.டி.ஐ-யின் ( Press Trust of India) கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் வரவேற்பு அறை மற்றும் அலுவலகத்தை அணுகலாம்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது
பசுமை கட்டடக்கலை மூலம் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மின்சார தேவை 30 % குறையும். மழை நீர் வடிகால் மற்றும் நீர் மறுசுழற்சி முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் 150 வருடங்கள் வரை இந்த கட்டிடம் நிலைத்து இருக்கும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
டெல்லி என்பது நில அதிர்வு ஏற்படும் பகுதி – வி என்பதால் இந்த புதிய கட்டிடம் நில அதிர்வை தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம், நில அதிர்வை தாங்கும் நிலையில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
புதிய லோக் சபா
புதிய லோக் சபா பகுதியின் சுவர்கள் மற்றும் மேற்கூரை முழுவதும், மயிலின் தோகை செதுக்கப்பட்டுள்ளது. இவை ’டியல் ’ கார்பெட்டுகளால் கூடுதலாக மெருகூட்டப்பட்டது. ராஜா சபை பகுதி தாமரைச் சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராஜா சபை மற்றும் லோக் சபா எம்.பிக்கள் ஒரே நேரத்தில் கூட்டத்தை நடத்த ஒன்று கூட முடியும். அனைவருக்கும், தொடு திரை வசதி கொண்ட மேசை அமைக்கப்பட்டுள்ளது.
ராஜா சபை பகுதியில், 384 நபர்கள் வரை அமரலாம். எதிர்காலத்தில் எம்.பிக்களின் அளவு அதிகரிக்கலாம் என்பதால் கூடுதல் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்ட அறை அல்லது மண்டபம்
புதிய கட்டத்தில் சட்ட அறை உள்ளது. இந்த அறையில் இந்திய ஜனநாயகத்தின் பயணத்தைப் பற்றி ஆவணங்கள் இடம் பெறும்.
வசதிகள்
எம்.பிக்களுக்கு ஓய்வு அறை, உணவு பரிமாறப்படும் அறை, நூலகம் ஆகியவை இருக்கிறது. இந்த புதிய கட்டிடத்தின் மத்தியில் உள்ள முற்றத்தில் ஆல மரம் உள்ளது.
அலுவலக வசதி
புதிதாக 6 கமிட்டி அறைகள் இருக்கிறது. இதுவே பழைய கட்டிடத்தில் 3 மட்டுமே இருந்தது. பல்வேறு துறை அமைச்சர்களுக்கு 92 அறைகள் உள்ளது. இவை துறை அமைச்சர்களின் அலுவலகமாக செயல்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil