Advertisment

சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சன்னிதானம் பகுதிக்கு யாரும் வரக் கூடாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

Advertisment

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு:

முக்கிய நிகழ்வுகள்:

* கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள சபரிமலை கோயில் நடை நாளை இரவு 10.30 மணிக்கு மூடப்படும்.

* சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், சபரிமலை கோயிலை பூட்டக் கூடாது. கோயில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது. பக்தர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது. வாகனங்களை சேதப்படுத்திய போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

* சென்ற முறை சபரிமலை கலவரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 3700 பேர்களுள் ஒருவரான பிரபல வலதுசாரி செயற்பாட்டாளரான ராகுல் ஈஷ்வர் போலீஸைப் போல தாங்களும் முழு முன்னெச்சரிக்கையுடன்தான் இருக்கிறோம் என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

* சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .  சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதனை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மாதம் அய்யப்பன் கோவில் நடை 6 நாள்கள் திறந்திருந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், சித்திரை ஆட்டத் திருநாளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  இன்று  (5.11.18) மாலை திறக்கப்படவுள்ளது. ஏராளமான பெண்கள் வரக்கூடும் என்பதால் சபரிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதோடு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சன்னிதானத்தில் பெண் போலீசாரை பணியில் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐஜிக்கள் தலைமையில் 3 கமாண்டோ படையினரும் சபரிமலைக்கு வரவழைக்கப்பட்டு, நிலக்கல், பம்பை சன்னிதானம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கோவிலுக்குச் செல்ல விரும்பும் பெண்கள், தங்களை அணுகினால், உச்சநீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்க தயாராக இருப்பதாக, போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடை திறக்கும் வரை சன்னிதானம் பகுதிக்கு யாரும் வரக் கூடாது என கூறியுள்ள போலீசார், ஊடகங்கள் செய்தி சேகரிக்கவும் தடை விதித்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment