2012 Delhi Gang Rape And Murder Case Convicts Hanging Execution : நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், இன்று அதிகாலை 5.30 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2012 டிசம்பர் 16ம் தேதி, டெல்லியில் பேருந்து ஒன்றில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார். ஒட்டுமொத்த நாட்டையும் இந்த சம்பவம் உலுக்கியது. பிறகு, நிர்பயா என்று அப்பெண்ணுக்கு பெயரிடப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
குற்றம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வழக்கில் தண்டனை பெற்ற 4 பேர் இன்று (மார்ச் 20) தூக்கிலிடப்பட்டனர்.
நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இறுதியாகத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
2012 Delhi Gang Rape Case Convicts Hanging Updates: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு லைவ்
Today is also the day to reflect by the judiciary, govt, civil society that should some people convicted for capital punishment be allowed to manipulate the system to delay it for 7 years: Union Law Minister @rsprasad
— Prasar Bharati News Services (@PBNS_India) March 20, 2020
’நீதி வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பையும், கெளரவத்தையும் உறுதி செய்வது மிகவும் முக்கியமானது” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
Justice has prevailed.
It is of utmost importance to ensure dignity and safety of women.
Our Nari Shakti has excelled in every field. Together, we have to build a nation where the focus is on women empowerment, where there is emphasis on equality and opportunity.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020
தேசிய தலைநகரில் 23 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி 8 வருடங்களாகி விட்டது. குற்றவாளிகளை தூக்கிலிட தாமதத்திற்கு என்ன வழிவகுத்தது? ஒரு விசாரணை நீதிமன்றம் "அபூர்வமான" வழக்குகளில் மட்டுமே மரண தண்டனையை உச்சரிக்கக்கூடும். அத்தகைய தண்டனையை உறுதிப்படுத்த உயர் நீதிமன்றத்திற்கு தானாகவே பரிந்துரைக்கப்படுகிறது
டிசம்பர் 16, 2012-ல் நடந்த சம்பவம், மீண்டும் "எந்தவொரு மகளுக்கும்" நடக்காது என்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதனை உறுதிப்படுத்த காவல்துறை, நீதிமன்றங்கள், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுத் தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தார்.
सात साल बाद आज निर्भया के दोषियों को फाँसी हुई
आज संकल्प लेने का दिन है- कि अब दूसरी निर्भया नहीं होने देंगे। पुलिस, कोर्ट, राज्य सरकार, केंद्र सरकार - सबको संकल्प लेना है कि हम सब मिलकर सिस्टम की ख़ामियों को दूर करेंगे और भविष्य में किसी बेटी के साथ ऐसा नहीं होने देंगे pic.twitter.com/OhsNaMAKq9
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 20, 2020
"இன்றைய நாள் நம் நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். தூக்கிலிடப்படுவதை தாமதப்படுத்தும் குற்றவாளிகளின் தந்திரங்கள் இறுதியாக செயல்படவில்லை. குற்றவாளிகளை தூக்கிலிடப்படுவதன் மூலம், குற்றவாளிகளை காப்பாற்ற மாட்டோம் என்று நீதித்துறை தெளிவுபடுத்தியுள்ளது "என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டிசம்பர் 16, 2012 அன்று, 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒருவர் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஆறு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டு இறந்தார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியதுடன், பெண்கள் பாதுகாப்பு கோரி நாடு தழுவிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அந்த பெண் 13 நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார். ஆறு பேரில், ஒருவர் சம்பவத்தின் போது ஒரு சிறுவனாக இருந்ததால், சிறார் நீதி வாரியத்தால் விசாரிக்கப்பட்டு, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொருவர், ராம் சிங், 2013-ல் திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாயார், "நான் என் மகளை நினைத்து பெருமைப்படுகிறேன், என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை, அதில் எனக்கு எப்போதும் வருத்தம் உண்டு. அவள் இன்று உயிருடன் இருந்திருந்தால், நான் ஒரு டாக்டரின் தாயாக அறியப்பட்டிருப்பேன். நீதி வழங்கப்பட்டது. நீதித்துறை, ஜனாதிபதி மற்றும், அரசாங்கங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற குற்றம் நடந்தால், நீங்கள் முதலில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து இந்தியாவின் மகள்களுக்காக போராடுவோம்” என்றார்.
இதனிடையே குற்றவாளிகள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் தனித்தனியே அவர்களுக்கான தூக்கு மேடையில் இன்று காலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் நேற்று இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகினார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங், ‘இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
கடந்த 5-ம் தேதி மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் 4 பேர் சார்பிலும் வக்கீல் ஏ.பி.சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தர்மேந்தர் ராணா நேற்று தள்ளுபடி செய்தார்.
அக்ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா தேவி நேற்று நீதிமன்றம் வந்திருந்தார். தனது கணவர் அப்பாவி என்றும், தனக்கு நீதி வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், கணவருடன் தன்னையும், தனது மகனையும் சேர்த்து தூக்கில் போட வேண்டும் என்று கோரி கதறி அழுததால் மயங்கி விழுந்தார்.
தொடர்ந்து டெல்லி சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம், ‘குற்றவாளிகள் 4 பேரையும் 20-ந் தேதி (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட’ புதிய மரண வாரண்ட் பிறப்பித்தார். கடந்த 5-ந் தேதி நீதிபதி தர்மேந்தர் ராணா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights