Advertisment

பெகாசஸை விலைக்கு வாங்கியதா இந்திய அரசு? - அன்றும் இன்றும் பதில் சொல்லாமல் நழுவும் மத்திய அரசு

என்.எஸ்.ஒ. நிறுவனம், தங்களின் ஸ்பைவேர் மென்பொறியை அரசாங்கம் மற்றும் அரசாங்க முகமைகளுக்கு மட்டுமே வழங்குகிறோம் என்று கூறியுள்ள நிலையில் இந்தியாவிற்கு இது வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார் கே.கே. ராகேஷ்

author-image
WebDesk
New Update
Pegasus, pegasus spyware

Manoj C G

Advertisment

Pegasus spyware : பெகாசஸ் ஸ்பைவேர் மற்றும் அதன்பயன்பாடு குறித்த அரசின் நிலைப்பாட்டில் 20 மாதங்கள் என்ன வித்தியாசத்தை கொண்டு வரும் என்று கேட்டால் ஒன்றுமில்லை.

திங்கள்கிழமை அன்று, புதிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய அமைச்சர், அஸ்வானி வைஷ்ணவ், முந்தைய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி இந்த கேள்விகளுக்கு அளித்த பதிலையே அளித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்ததை செய்தியாக வெளியிட்ட நிலையில், மாநிலங்களவையில் பிரசாத் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பிரசாத் மற்றும் வைஷ்ணவ் இருவரும் எதிர்க்கட்சியின் உறுப்பினருக்குப் பிறகு உறுப்பினர் எழுப்பிய முக்கிய கேள்விக்கு பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டனர். பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு வாங்கியதா என்பது தான் அந்த கேள்வி. ஆம் என்றால், அதன் பயன்பாட்டின் விதிமுறைகள் என்ன? அதற்கு பதிலாக இந்த இரண்டு அமைச்சர்களுமே னைத்து மின்னணு குறுக்கீடுகளும் உரிய செயல்முறையைப் பின்பற்றுகின்றன என்ற கூற்றை மீண்டும் வலியுறுத்த சட்டத்தின் பிரிவுகளை மேற்கோள் காட்டினர்.

மேலும் படிக்க : “பெகாசஸ் ஸ்பைவேர்” பத்திரிக்கையாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற 3 எக்ஸ்பிரஸ் ஆசிரியர்கள்

இன்று வெளியிடப்பட்ட உயர்மட்ட பெயர்கள் மற்றும் எழுப்பப்பட்ட கேள்விகளை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரிக்கும் பட்சத்தில், சர்ச்சையின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டு நடைபெற்ற விவாதம், தற்போது என்ன நடக்கும் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் அன்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் திக்விஜய சிங், வாட்ஸ்அப் ஹேக்கில் மூன்று சாத்தியக்கூறுகள் மட்டுமே இருக்க முடியும் என்று கூறினார். ஒன்று, அரசு நேரடியாக உளவு வேலையில் சட்டப்பூர்வமாக இறங்கியிருக்கலாம். இரண்டாவது சட்டத்திற்கு புறம்பாக இது அரங்கேற அரசு அனுமதி அளித்திருக்கலாம் அல்லது அரசின் கவனத்திற்கு தெரியாமல் சட்டவிரோதமாக இது நடைபெற்றிருக்கலாம். ஏதேனும் அரசு நிறுவனங்கள் பெகாசஸ் மென்பொருளை சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதா? அரசாங்கம் இல்லாவிட்டால், இஸ்ரேலின் என்.எஸ்.ஒ குழு இதனை மேற்கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனை ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சியின் தொடர்ந்து தங்களின் கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பு நோக்கத்திற்காக மின்னணு தகவல்தொடர்புகளை சட்டப்பூர்வமாக குறுக்கிடுவதற்கான ஏற்பாடுகள் ஐ.டி சட்டத்தின் பிரிவு 69 மற்றும் தந்தி சட்டத்தின் பிரிவு 5 ஆகியவை உள்ளன என்று பிரசாத்தை போன்றே வைஷ்ணவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் திக் விஜயசிங், ஆனந்த் ஷர்மா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார்கள்.

பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கிய என்.எஸ்.ஒ. நிறுவனத்துடன் இந்திய அரசு ஏதேனும் ஒப்பந்தம் செய்துள்ளதா அல்லது ஏதேனும் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதா என்று சிங் கேள்வி எழுப்பினார்.

அமைச்சருக்கான என்னுடைய கேள்வி மிகவும் தெளிவானது. அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர, அரசாங்க நிறுவனங்கள் இந்த ஸ்பைவேரை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தியுள்ளனவா? என்று ஷர்மா கேள்வி எழுப்பினார்.

பெகாசஸ் ஸ்பைவேர் வாங்கப்பட்டதா இல்லையா என்ற கேள்வியை ரமேஷ் எழுப்பினார்.

மேலும் படிக்க : 2 அமைச்சர்கள் மற்றும் 3 எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்கள் கண்காணிப்பு

இந்திய குடிமக்களை உளவு பார்ப்பதற்காக அரசாங்க முகமைகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஸ்பைவேரை யார் வாங்கியது என்ற விசாரணையை இந்திய அரசு மேற்கொண்டதா? பெகாசஸ் ஸ்பைவேர் பயன்பாட்டின் மூலம் தரவை இடைமறித்தல், கண்காணித்தல் அல்லது மறைகுறியாக்க அரசாங்கம் எந்த வகையிலும் அனுமதி அளித்ததா? என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நதிமுல் ஹக்கூ கேள்வி எழுப்பினார்.

சி.பி.எம். கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ், “பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கும் என்.எஸ்.ஒ. நிறுவனம், தங்களின் ஸ்பைவேர் மென்பொறியை அரசாங்கம் மற்றும் அரசாங்க முகமைகளுக்கு மட்டுமே வழங்குகிறோம் என்று கூறியுள்ள நிலையில் இந்தியாவிற்கு இது வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார். மேலும். இந்தியாவின் இந்திய அரசு முகமை ஸ்பைவேரை இந்தியாவிற்கு கொண்டு வந்ததது? அரசாங்கம் நேரடியாக இந்த ஸ்பைவேரை வாங்கியதா அல்லது ஏதேனும் முகமைகள் மூலம் வாங்கியதா என்ற கேள்விகளையும் எழுப்பினார்.

சட்ட விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருந்தால் அது சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும். யாருக்கேனும் பிரச்சனை இருந்தால் அவர்கள் முதலில் தங்களின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யட்டும். முதலில் அவர்கள் புகார்களை முன்வைக்கட்டும். என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில், ‘அங்கீகரிக்கப்படாத அறிவுறுத்தல்’ எதுவும் செய்யப்படவில்லை. அவ்வளவுதான் என்று கூறினார் பிரசாத்.

ஸ்பைவேர் மற்றும் இந்திய பயனர்களுக்கு அதன் தாக்கம் குறித்த விவரங்களை கோரி இந்திய கணினி அவசர குழு (சிஇஆர்டி-இன்) என்எஸ்ஓ குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாக பிரசாத் சபையில் தெரிவித்தார். மற்றொரு புறம், வைஷ்ணவ், "பெகாசஸைப் பயன்படுத்தி காட்டப்படும் நாடுகளின் பட்டியல் தவறானது மற்றும் குறிப்பிடப்பட்ட பல நாடுகள் எங்கள் வாடிக்கையாளர்கள் கூட இல்லை" என்று என்எஸ்ஓ கூறியதாக குறிப்பிட்டார்.

பகிரங்கமாக வெளிவந்த பெயர்கள் நரேந்திர மோடியிடம் நீண்டகால வெறுப்பை கொண்டிருந்தவர்கள் என்பது தற்செயலானது. இந்த அறிக்கைகள் இந்திய ஜனநாயகத்தை "கேவலப்படுத்தும்" முயற்சியாகும் என்று வைஷ்ணவ் திங்களன்று கூறினார்.

எங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. யாருக்கு புகார் வந்தாலும், அவர் வழக்குத் தாக்கல் செய்யலாம், ரூ .5 லட்சம் இழப்பீடு பெறலாம், குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பலாம். இந்த விசாரணைக்கு மத்திய அரசு முற்றிலும் ஒத்துழைக்கும் என்று கூறினார். ஆனால் எந்த வகையிலும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விசாரணையிலும் இந்திய அரசாங்கம் ஈடுபடாது. ஏனெனில் இது இந்திய மக்களின் மரியாதைக்குரிய விஷயம் என்று பிரசாத் கூறியிருந்தார்.

மேலும் படிக்க : இஸ்ரேல் நாட்டில் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன?

பாஜகவில் இருந்து என்னுடைய சகாக்கள் டெலிகிராம், சிக்னல் அல்லது வாட்ஸ்அப்பில் என்னிடம் பேசுகிறார்கள். இது தற்போதைய சுற்றுச்சூழலின் அமைப்பாகும் என்றும் அவர் கூறினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, இஸ்ரேலிய கண்காணிப்பு முறை மற்றும் இஸ்ரேலிய நிர்வாக முறை மீதான புதிய காதல் இது என்று தற்போதைய சூழலை அவர் வெளிப்படுத்தினார்.

எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நீங்கள் அதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும், இது நம் சூழலில் இயல்பாக்கப்பட்டால், நமது பொது வாழ்க்கையில் நிலைத்தன்மை என்பது இல்லாமலே போய்விடும் என்று கூறினார். சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருக்கும் பாஜகவின் பூபேந்தர் யாதவ், 21 தொலைபேசிகளை கருத்தியல் ரீதியாக வேறுபட்டதற்காக கண்காணிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா அல்லது தனியுரிமையின் உண்மையான பிரச்சினையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pegasus Spyware Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment