Advertisment

சிறப்பு வகுப்புக்கு ஆப்சென்டான ஐ.பி.எஸ் அதிகாரிகள்: நடவடிக்கை பாயும் என மத்திய அரசு எச்சரிக்கை

ஸ்பெஷல் பவுண்டேஷன் கோர்ஸ் வகுப்பில் கலந்து கொள்ளாத 203 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPS off



ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா டாக்டர் எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் பவுண்டேஷன் கோர்ஸ் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வகுப்பில் இதுவரை  கலந்து கொள்ளாத 203 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Advertisment

தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பிகளுக்கு செப்டம்பர் 17-ம் தேதி துணைச் செயலாளர் டி.கே.கோஷ்  எழுதிய கடிதத்தில்,   “மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) தெரிவித்தபடி, பொதுவான பவுண்டேஷன் படிப்புகள் உடன் கூடுதலாக வேறு ஒரு சிறப்பு பவுண்டேஷன் படிப்புகளையும்  அதிகாரிகள் படிக்க வேண்டும். 2022 தொகுதி வரையிலான பேக்லாக் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்டது.

இது சம்பந்தமாக, இந்த அமைச்சகத்திடம் உள்ள பதிவுகளின்படி, 2018 முதல் 2022 வரையிலான மொத்தம் 203 நேரடி ஆட்சேர்ப்பு ஐபிஎஸ் பேக்லாக் அதிகாரிகள் இதுவரை தங்கள் அடிப்படைப் படிப்பை மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கோஷின் கூற்றுப்படி, இந்தியக் காவல் சேவை (நடைமுறை) விதிகள், 1954-ன் படி, ஒரு தகுதிகாண் நடுவர் மத்திய அரசிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும் தகுதிவாய்ந்த அதிகாரத்திடம் இருந்தோ அல்லது மத்திய அரசின் கருத்துப்படி பெறக்கூடிய எந்த உத்தரவுக்கும் கீழ்ப்படியத் தவறினால் அரசாங்கம், அவர் தனது தகுதிகாண் படிப்பை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார். இதற்கு ஐ.பி.எஸ் (நடைமுறை) விதிகள் 11 (3) 1954.

 மற்றும் 12 (c) மற்றும் (d) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆங்கிலத்தில் படிக்க:  203 IPS officers may face action for skipping Special Foundation Course, warns Centre

முந்தைய பேட்ச்களில் 203 ஐபிஎஸ் அதிகாரிகளை சேர்த்த பிறகு, இப்போது மொத்தம் 443 அதிகாரிகள் உள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகளில், தரவுகளின்படி, 2020 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 93 பிற சேவை அதிகாரிகளும், 2021, 2022, 2023 மற்றும் 2024 பேட்ச்களில் இருந்து 350 அதிகாரிகளும் உள்ளனர்.

சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளாத, அதிகாரிகள் மீது, இந்தியக் காவல் சேவையின் விதி- 11 (3) மற்றும் 12 (c) & (d)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று என்று கோஷ் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment