/indian-express-tamil/media/media_files/Wej3jBqBhDV2PLkODCqO.jpg)
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் விளையாட்டு மண்டலத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
தீ பற்றிய காணொளியில், வெகு தொலைவில் இருந்து கடுமையான புகை மூட்டத்தைக் காண முடிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வார விடுமுறை என்பதால் வணிக வளாகத்தில் கூட்டம் அலைமோதியது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில், விளையாட்டு மண்டலத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ராஜ்கோட் நகர நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “ராஜ்கோட்டில் விளையாட்டு மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி மற்றும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, ”என்று படேல் சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில் கூறினார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் அரசு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என்றும் படேல் அறிவித்தார்.
"உடல்கள் முற்றிலும் கருகிவிட்டன, அவற்றை அடையாளம் காண்பது கடினம்" என்று காவல்துறை உதவி ஆணையர் (ஏசிபி) விநாயக் படேல் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.