Advertisment

பெங்களூரில் பெண் ஊழியர் படுகொலை: தோழியின் முன்னாள் காதலன் மீது குற்றச்சாட்டு!

கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரி பீகாரைச் சேர்ந்தவர் என்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்

author-image
WebDesk
New Update
Bangalore Murder Case

குற்றம் சாட்டப்பட்ட அபிஷேக், போபாலைச் சேர்ந்தவர், தற்போது அவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்

பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர், அந்த பெண் தங்கியிருந்த விடுதியில் அவருடன் தங்கியிருந்த தோழியின் முன்னாள் காதலன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

Read In English : 24-year-old stabbed to death in Bengaluru PG, accused is roommate’s ex-boyfriend

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவுக்கு அருகே கோரமங்களாவில் உள்ள தங்கும் விடுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஜுலை 23) இரவு 11 மணியளவில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கிருத்தி குமாரி என்ற அந்த பெண் பீகாரை சேர்ந்தவர் என்றும், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் அபிஷேக் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டள்ளது. போபலை சேர்ந்த அவர், தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார் என்பதும், இவர், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தங்கியிருந்த பெண்ணின் முன்னாள் காதலர் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் தகவலின்படி, அவர் ஒரு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றியவர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர், கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரியின் அறை தோழியுடன் காதலில் இருந்துள்ளார். வேலை இல்லாத அவர், தனது காதலியிடம் தான் வேலை செல்ல தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அது பொய் என்று தெரிந்துகொண்ட அவர், இறுதியில் தனது காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் கோபமான அபிஷேக், தனது காதலி தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவருடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறில் சமாதானம் பேசுவதற்காக குமாரி அடிக்கடி இந்த பிரச்சனையில் தலையிட்டுள்ளார். மார்ச் முதல் விடுதியில் தங்கியிருந்த குமாரி, அபிஷேக்குடன் வாழ்வதை நிறுத்திவிட்டு வேலையில் கவனம் செலுத்துமாறு கூறியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுதியின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி அபிஷேக்கை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதே சமயம் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்றும் அவர் மாநிலத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment