ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் : பொது நிறுவனங்களிற்கும் மத்திய அரசிற்கும் இடையிலான உறவு சமீப காலமாக சுமூகமாக இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறையில் பல்வேறு சிக்கலான சூழல்கள் உருவாகி, ஒவ்வொரு சிபிஐ அதிகாரிகளும். நீதிமன்றங்களை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்
தற்போது ஆர்.பி.ஐக்கும் இது போன்ற நிலை உருவாகியுள்ளது. ஆர்.பி.ஐயில் இருக்கும் உபரி நிதியினை மத்திய அரசுடன் பகிர்ந்த்து கொள்வது தொடர்பாகவும், மத்திய அரசிற்கு கடன் வழங்குவது தொடர்பாகவும் மத்திய அரசிற்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அதன் நீட்சியாக தன்னுடைய பதவியை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வார் என்ற அறிவிப்புகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் நேற்று ஆர்.பி.ஐ இயக்குநர்கள், பொருளாதார விவகாரங்கள் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதி சேவைத் துறை செயலர் ராஜீவ் குமார், எஸ். குருமூர்த்தி போன்றோர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக இந்த கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்
- இந்த கூட்டத்தில், ரிசர்வ் வங்கியில் உள்ள 9 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை நிபுணர் குழுவை வைத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
- சிறு மற்றும் குறுந்தொழில் புரிபவர்களுக்கு 25 கோடி ரூபாய் வரை கடன் வழங்கலாம்.
- ரூ. 8000 கோடி வரையிலான கடன் பத்திரங்களை மத்திர அரசிடம் இருந்து பெறுவது.
- போன்ற முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை சமர்பித்துள்ளது.