/tamil-ie/media/media_files/uploads/2023/03/indore-temple.jpg)
மத்தியப் பிரதேசத்தில் கோவில் கிணறு இடிந்து விழுந்து விபத்து
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பட்டேல் நகரில் பழங்கால கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இன்று ராம நவமி பூஜை நடைபெற்றது.
அப்போது கோவில் கிணற்றின் அருகிலும் அதன் மேலேயும் பக்தர்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் கிணறு பாறம் தாங்காமல் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் 25க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் படையினர் பணியை துரிதப்படுத்திவருகின்றனர்.
#WATCH | Madhya Pradesh: Many feared being trapped after a stepwell at a temple collapsed in Patel Nagar area in Indore.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 30, 2023
Details awaited. pic.twitter.com/qfs69VrGa9
இந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமானது எனக்கூறியுள்ள அம்மாநில முதல் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான், விபத்தில் சிக்கியர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் காயமுற்றவர்களுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.