நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, 2018 - 2020 க்கு இடையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 9,140 பேர் வேலையின்மை காரணமாகவும், 16 ஆயிரத்து 91 பேர் கடன் தொல்லை காரணமாகவும் இறந்துள்ளனர்.
இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வழங்கிய தரவுகளின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.
தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் காலத்தின் போது வேலையில்லாதவர்கள் தற்கொலைகள் செய்வது அதிகரித்துள்ளது. 2020இல் அதிகப்பட்சமாக 3,548 பேர் இறந்துள்ளனர். 2018இல் 2,741 பேரும், 2019இல் 2,851 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்களால் வேலையின்மை பிரச்சினை பல முறை எழுப்பப்பட்டது. அவர்கள் கொரோனா பெருந்தோற்றை நாடு எதிர்கொள்ளும் சமயத்தில், அதனை சமாளிக்க பட்ஜெட்டில் சிறிதும் இல்லை என்று குற்றம் சாட்டியனர்.
இதுதொடர்பாக பேசிய ராய், மனநலம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. நாட்டின் 692 மாவட்டங்களில் NMHP இன் கீழ் மாவட்ட மனநலத் திட்டத்தை (DMHP) செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தற்கொலை தடுப்பு சேவைகள், பணியிட அழுத்த மேலாண்மை, வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருந்தாலும், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 23 கோடி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
வேலைவாய்ப்பு உருவாக்குதல் குறித்து பேசிய ராய், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் மிஷன், ஸ்மார்ட் சிட்டி மிஷன், புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன், அனைவருக்கும் வீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்துறை தாழ்வாரங்கள் போன்ற அரசாங்கத்தின் திட்டங்கள் வேலைவாய்ப்பு அதிகரிப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சசீ தரூர் கூறுகையில், " இந்தியாவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் வருமானத்தில் 53 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளனர் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். 100 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், 4.7 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே கடும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜனவரி நிலவரப்படி வேலையின்மை விகிதம் 6.75 சதவீதமாக உள்ளது. ஆனால், முந்தைய மாதத்திலிருந்த 7.9 சதவீதத்திற்கு இது நல்ல முன்னேற்றம் ஆகும்.
கடந்த 45 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வேலையின்மை விகிதத்தை விட இது அதிகமாக உள்ளது. இந்தியாவின் வேலையின்மை விகிதம் வங்கதேசம் மற்றும் வியட்நாமை விட வேகமாக வளர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், தனிநபர் வருமானம் குறைந்தாலும், 84 சதவீத குடும்பங்கள் வருமான இழப்பை சந்தித்துள்ளன" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil