Advertisment

26/11 Mumbai Attack Anniversary: நம் ஒற்றுமையை குலைக்க தீவிரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது - அமிதாப் பச்சன்

26/11 Mumbai Attack Anniversary LIVE Updates: '26/11 Stories of Strength' என்ற பெயரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் நிகழ்வு மாலை 6 மணிக்கு தொடங்குகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
26/11 Mumbai Attack Anniversary LIVE Updates: உயிர் பிழைத்தவர்களும், மும்பையில் அவர்கள் மீண்டு வந்த அனுபவமும்

26/11 Mumbai Attack Anniversary LIVE Updates: உயிர் பிழைத்தவர்களும், மும்பையில் அவர்கள் மீண்டு வந்த அனுபவமும்

26/11 Mumbai Attack Anniversary LIVE Updates: 26/11 எனும் மும்பை தீவிரவாத தாக்குதலின் கொடூர சம்பவத்தின் 10வது நினைவு ஆண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸின் '26/11 Stories of Strength' என்ற நிகழ்வால் அனுசரிக்கப்படுகிறது. இதில், தீவிரவாத தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களையும் அவர்களது குடும்பங்களையும் கௌரவப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  அதுமட்டுமின்றி, அவர்களது இழப்புகளும், துக்கங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்.

Advertisment

தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொலை வெறித் தாக்குதலை மக்களுடன் சேர்ந்து, அவர்களின் துக்கத்தில் கலந்துக் கொண்டு இந்த நாளை நினைவூட்டி, இறந்தவர்களுக்கு உரிய மரியாதையை இந்தியன் எக்ஸ்பிரஸ் செலுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் பெருமிதம் கொள்கிறது. 26/11 மும்பையின் கறுப்பு நாள். இந்த தாக்குதலில் மக்களை காப்பாற்ற எத்தனையோ காவலர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த '26/11 Stories of Strength' எனும் நிகழ்வு, கொலபாவில் அமைந்துள்ள Gateway of India-வில் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், அமிதாப் பச்சன், தேவேந்திர ஃபட்நாவிஸ், பியூஷ் கோயல், ஜாவித் அக்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ஃபெரோஸ் அப்பாஸ் கான் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார்.

08:35 PM - மகாராஷ்டிரா முதல்வர் தேவந்திர ஃபட்னாவிஸ் பேசி வருகிறார்.

publive-image

08:20 PM - தொடர்ந்து பேசிய அமிதாப் பச்சன், "ஒற்றுமை என்பது பொதுவானவற்றை விட மேலானது. ஒற்றுமை என்பது ஒரு கொண்டாட்டம். ஒரு வலி. ஒரு பெருமை, ஒரு வாழ்க்கை. ஒருமை என்பது கருத்து அல்ல. அது வாழும் உண்மை. இது நம் வாழ்வின் சாரம்" என்றார்.

08:15 PM

07:50 PM - பாலிவுட் லெஜண்ட் அமிதாப் பச்சன் உரையாற்றி வருகிறார்.

publive-image

07:40 PM - தனது தாயை ரயில் ஏற்றிவிட வந்த வினோத் குப்தா என்பவர் மீது, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அவரது இதயம் துளைக்கப்பட்டு, அதே இடத்தில் அவர் மரணமடைந்தார். அவரது 16 வயது மகள் அஞ்சலி குப்தா, அன்று நடந்த சம்பவத்தை சொன்ன போது, பலரது கண்களில் இருந்தும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

07:15 PM - பின்னர் பேசிய இந்தியாவுக்கான பேஸ்புக் பொது கொள்கை இயக்குனர் அன்கி தாஸ், "இந்த ஒரு வருடத்தில் மட்டும் தீவிரவாதம் தொடர்பான 14 மில்லியன் உள்ளடக்கங்களை பேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளோம்" என்றார்.

06:55 PM - இந்தியன் எக்ஸ்பிரஸின் நிர்வாக இயக்குனர் அனந்த் கோயங்கா உரையாற்றினார்.

06:44 PM - தீவிரவாத தாக்குதலில் பலியான மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தை தொடக்கவுரை நிகழ்த்தினார். தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், கமாண்டோ ஒருவர் காயம் அடைய, அவரை பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிட்டு, தனி ஆளாக தீவிரவாதிகளை எதிர்கொண்ட போது, வீர மரணம் அடைந்தார்.

06:33 PM

06:28 PM - மும்பை காற்றில் இழைந்தோடும் கப்பற்படையினரின் மெல்லிசை

publive-image

06:16 PM - மும்பை போலீசாரைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசைக்கும் இந்திய கப்பற்படையின் பேண்ட் குழு

06:10 PM - உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மும்பை போலீசாரின் பேண்ட் குழு

publive-image

06:00 PM

05:50 PM - மும்பை தாஜ் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல்

publive-image

05:40 PM - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில், "மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நபர்களுடன் என் நினைவுகள் என்றும் இருக்கும். அன்றைய தினம் தங்கள் உயிரையே தியாகம் செய்த காவலர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நாம் வீர வணக்கம் செலுத்துவோம். நீதியை பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் இந்தியா தொடர்ந்து நிலையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

05:30 PM - இந்த நிகழ்ச்சி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டிஜிட்டல் நியூஸ் குழு – ஏபிபி நியூஸ், ரிப்பளிக் டிவி மற்றும் 92.7 எஃப்எம், இந்தியாவின் No.1 பிரீமியம் ஹிந்தி பொழுதுபோக்கு சேனல்களில் ஒளிப்பரப்படுகிறது.

Mumbai Indian Express
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment